Raima Islam Shimu | சாக்கு மூட்டைக்குள் சடலமாக நடிகை! உடம்பெல்லாம் காயம் - விசாரணையில் சிக்கும் கணவர்!

ரைமா திடீரென காணாமல் போனார். தன்னுடைய மனைவியை காணவில்லை என ரைமாவின் கணவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

Continues below advertisement

காணாமல்  போனதாக தேடப்பட்டு வந்த நடிகை ரைமா சாக்குமூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். 

Continues below advertisement

வங்காளத்தின் பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு. 45 வயதான இவர் 1998ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரைமா பின்னர் சீரியல்களில் கவனத்தை திருப்பினார். சீரியல், விளம்பரங்கள், தயாரிப்பு என திரையுலகில் பரபரப்பாக இருந்த ரைமா திடீரென காணாமல் போனார். தன்னுடைய மனைவியை காணவில்லை என ரைமாவின் கணவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

மேலும் படிக்க: நண்பர்களோடு சேர்ந்து மனைவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை; அந்தரங்க உறுப்பில் சிகரெட் சூடு - கணவர் உள்பட 5 பேர் கைது


மேலும் படிக்க: மதிப்பெண்களை காட்டி பள்ளி மாணவிகளை ப்ளாக்மெயில் செய்த சைக்கோ ஆசிரியர்.. குவிந்த புகார்கள்!

புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை நடிகையை தீவிரமாக தேடினர். கடைசியாக ரைமா யாரிடம் பேசினார்? எங்கே சென்றார் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. யாரேனும் நடிகை கடத்தினார்களா அல்லது நடிகை கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது. இதற்கிடையே ஹஸ்ரத்பூர் பாலம் அருகே சாக்குமூட்டையில் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. 

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அது காணாமல் போன நடிகை ரைமாதான் என போலீசார் உறுதி செய்தனர். ரைமாவின் உடலில் தாக்குதலுக்கு உள்ளான காயங்கள் இருந்ததால் இது கொலை என உறுதிசெய்து அது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளன. இது தொடர்பாக ரைமாவின் கார் ஓட்டுநர் மற்றும் கணவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக நடிகை ரைமா காணாமல் போன விவகாரத்தில் திரையுலகைச் சேர்ந்த முக்கியமான நடிகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், இது கடத்தலாக இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது ரைமா சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நடிகை கொலை தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்ஸ்டாவில் மெசேஜ் அனுப்பிய கடத்தப்பட்ட சிறுமி: ஸ்நாப்சாட் உதவியுடன் மீட்ட பிரெஞ்சு போலீஸ்!

மேலும் படிக்க: உடலுறவை தவிர்த்து வந்த எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட கணவன் - காவல்நிலையத்தில் புகாரளித்த மனைவி...

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola