கனடாவின் ஒன்றாறியோவின் விண்ட்ஸ்டரில் உள்ள பள்ளியில் 34 வயதான ஒருவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாகவே தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல்ரீதியான சீண்டுதலில் ஈடுபட்டுள்ளார். 


அதிலும் குறிப்பாக, தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுக்கும் பெண்களிடம் மார்க்கை அடிப்படையாக கொண்டு தொடர் அத்துமீறுதலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் பொறுத்துக்கொள்ள முடியாத பள்ளி மாணவி ஒருவர் இதுகுறித்த புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். 


மேலும் படிக்க : Watch video : பெண்ணை ரயில் பாதையில் தள்ளிவிட்டு தப்பிய நபர் கைது.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்


வழக்குபதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் அந்த ஆசிரியர் மீது அடுத்தடுத்து 5 மாணவிகள் பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளனர். அந்த ஆசிரியர் தங்கள் மீதும் கைகளை அத்துமீறி வைத்ததாகவும், வேண்டாம் என்று தடுத்தும் கட்டாயப்படுத்தியாகவும் புகார் அளித்துள்ளனர். 


காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் 18 வயதினர் என்பதால் அந்த ஆசிரியரை உடனடியாக கைது செய்தனர். மேலும், அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 


Kerala lottery | ஒரு கிலோ கறி வாங்க வந்த இடத்தில் ரூ.12 கோடி பம்பர் பரிசு... கேரள பெயிண்டர் வாழ்க்கையில் ‛லாட்டரி’ மேஜிக்!



தொடர்ந்து, அந்த ஆசிரியரால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதி யாரேனும் பாதிக்கப்பட்திருந்தால்  தைரியமாக முன் வந்து புகார் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். அவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தாமாக முன்வந்து புகாரளித்தால் அவர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் மறைக்கப்படும் என்றும், எதிர்காலம்  பாதுகாப்பு கருதி வெளியிடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அளித்த நம்பிக்கை காரணமாக இன்னும் பல மாணவிகள் அவர் மீது புகாரளிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Dhanush Aishwarya Separation | காதல் கொண்டேன் முதல் நாள்..வீட்டுக்கு வந்த பூங்கொத்து: தனுஷ் - ஐஸ்வர்யா முதல் சந்திப்பு


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


Karunas | ‛ஹோட்டல்ல ரூம் பாயா வேலை பார்த்தவன் நான்...’ - கடந்த காலத்தை நினைவு கூர்ந்த கருணாஸ்..


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண