தனுஷும், ஐஸ்வர்யாவும் தாங்கள் விவாகரத்து செய்யவிருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இருவரும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “18 ஆண்டுக்காலமாக நல்ல நண்பர்களாக, கணவன் மனைவியாக, பெற்றோர்களாக ஒன்றாக பயணித்து வந்துள்ளோம். இந்த பயணம் முழுவதிலும், வளர்ச்சி, புரிதல், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறோம். ஆனால், இன்று இருவரும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. நானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். 




எங்கள் இருவரையும் புரிந்துகொண்டு, இதில் இருந்து இருவரும் மீண்டு வருவதற்கான கால அவகாசத்தை அனைவரும் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். எங்களுடைய முடிவை ஏற்று எங்களது தனிமையை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.


இதனையடுத்து தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணமாக பலர் பல கதைகளையும், பலர் அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கிவருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், “விவாகரத்து என்பது பெற்றோர்களுக்கு வேண்டுமானால் சரியான முடிவாக இருக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு அது ஒரு தவறான முடிவு.






குழந்தைகளின் நலனுக்காக ஒன்றாக வாழ வேண்டும் என நமது முன்னோர்கள் சரியாக கூறி இருக்கிறார்கள். குடும்பத்தில் குழந்தைகள் பிறந்துவிட்டால் அவர்களுக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.






அதேபோல் மற்றொரு ட்வீட்டில், “பிறருக்காக வாழாவிட்டால் நம் வாழ்வு அர்த்தமற்றது. ஒவ்வொருவருக்கும் அவரவர் வழியில் செல்ல உரிமை உண்டு. என்னைப் பொறுத்தவரை, என் குழந்தைகள் மற்றும் குடும்ப நலன் முதன்மையானது” என பதிவிட்டுள்ளார்.


மேலும் மற்றொரு ட்வீட்டில், “ஒன்றாக வாழ்வது என்பது ஒரே கூரையின் கீழ் இணைந்து வாழ்வதைக் குறிக்காது. தேவை ஏற்படும்போது குழந்தைகளுக்காக ஒற்றுமையாக நிற்க பெற்றோர்கள் இருப்பார்கள் என்பதற்கான அர்த்தம்தான் அது.






தேவைப்பட்டால் தனித்து வாழலாம். குழந்தைகளிடமிருந்து உங்கள் வேறுபாடுகளை விலக்கி, ஒரு நாகரீகமான மற்றும் முதிர்ச்சியடைந்த பாணியில் ஒருவரையொருவர் கையாளுங்கள்” என கூறியுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண