Mumbai Abusive: பெண்ணின் கோர முயற்சி - பிறப்புறுப்பில் கத்தி, கல் - உண்மையை அறிந்து போலீசாரே ஷாக்

Mumbai Abusive: மும்பையில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

Mumbai Abusive: மும்பையில் 20 வயது பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக, ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Continues below advertisement

பிறப்புறுப்பில் கத்தி, கல்:

மும்பையில் 20 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது அந்தரங்க உறுப்புகளில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு மற்றும் கற்களை வலுக்கட்டாயமாக உள்நுழைத்ததாக ஆட்டோ ஓட்டுர் ஒருவர் கடந்த செவ்வாயன்று கைது செய்யப்பட்டார். தான் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறையின் முதற்கட்ட விசாரணை, இந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தனது பிறப்புறுப்பில் தானே கத்தி போன்றவற்றை போட்டுக் கொண்டுதாகவும் கூறப்படுகிறது.

அந்த பெண் சொன்னது என்ன?

மகாராஷ்டிராவின்  கோரேகானில் உள்ள ராம் மந்திர் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது நடந்த விசாரணையில், அனாதையான தான் வாரணாசியில் தனது மாமாவால் வளர்க்கப்பட்டதகாவும், கடந்த 20ம் தேதி மும்பைக்கு வந்ததாகவும், அங்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதகாவும்” முதலில் தெரிவித்துள்ளார். போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டபிறகு, தான் கூறிய அனைத்துமே கட்டுக் கதைகள் என ஒப்புக்கொண்டுள்ளார். தன்னுடைய பெற்றோர் உயிரோடு இருப்பதகாவும், அவர்கள் நலசோபராவில் வசித்து வருவதையும் தெரிவித்துள்ளார்.

உண்மையில் நடந்தது என்ன?

போலீசாரின் விசாரணையில் வெளிவந்த தகவல்களின்படி, ”அந்தப் பெண்ணின் தந்தை ஒரு வியாபாரி. வீட்டில் தனது தாய்க்கு சமைப்பதற்கு உதவியதோடு,  அருகில் உள்ள ஒரு பாத்திரம் தயாரிக்கும் பட்டறையில் வேலை செய்தும் வந்துள்ளார். ஆனால், அவரது தந்தை அடிக்கடி அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.  தனது 3 உடன்பிறப்புகளுடனும் அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஜனவரி 21ம் தேதி, தனது தந்தையுடன் தகராறு செய்த பின்னர், குடும்பத்தினரிடம் வேலைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு அந்த பெண் வெளியேறியுள்ளார்.

தொடர்ந்து பணியிடத்திற்கு சென்று அங்கிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பின்னர் அவர் நலசோபரா நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு ஆட்டோ ஓட்டுநரைச் சந்தித்த அந்த பெண், தனது குடும்ப பிரச்சனைகள் மற்றும் தற்கொலை எண்ணங்கள் குறித்து பேசியுள்ளார்.  தொடர்ந்து அந்த ஆட்டோ ஓட்டுனர் அவளை ஆறுதல்படுத்த முயன்றுள்ளார். பின்னர் அர்னாலாவுக்கு அழைத்துச் சென்று, இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்தார்” என கூறப்படுகிறது. இதையடுத்து, வீட்டிற்கு திரும்ப அச்சம் கொண்ட அந்த பெண், கத்தி மற்றும் கல்லை தானே பிறப்புறுப்பில் நுழைத்துக் கொண்டதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். ஆனால், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மனநல பாதிப்பு:

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவல்களின்படி, அவரது பெற்றோரையும் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ”பாதிக்கப்பட்ட பெண் கடந்த காலங்களில் பலமுறை வீட்டை விட்டு வெளியேறி இருப்பது, . அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் மற்றும் பாந்த்ராவை தளமாகக் கொண்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்பன போன்ற தகவல்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Continues below advertisement