Crime: முன்னாள் டிஜிபி மர்ம மரணம்... பட்டப்பகலில் பரபரப்பு., மனைவிக்கு தொடர்பா? போலீசார் விசாரணை

ஓம் பிரகாஷின் மகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது

Continues below advertisement

கர்நாடகாவின் முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான நிலையில் இறந்து கிடந்த நிகழ்வு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

முன்னாள் டிஜிபி: 

கர்நாடகாவின் முன்னாள் டிஜிபியான ஓம் பிரகாஷ் கடந்த 1981 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்,  இவர், 2015 ஆம் ஆண்டு கர்நாடகாவின் 38வது டிஜி & ஐஜிபியாகப் பணியாற்றினார். பீகாரில் உள்ள சம்பாரணைச் சேர்ந்தவர். தனது பணிக்காலத்தில், வீட்டுக் காவல் படையின் கமாண்டன்ட் ஜெனார்லாகவும், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள், சிவில் உரிமைகள் அமலாக்கம் மற்றும் பிற துறைகளிலும் பணியாற்றினார்.

அவர் மாநில ஊழல் கண்காணிப்பு ஆணையம், கர்நாடக லோக்ஆயுக்தா மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) ஆகியவற்றிலும் பணியாற்றியுள்ளார். கூடுதலாக, அவர் போக்குவரத்து ஆணையராகவும் பணியாற்றினார், மேலும் கார்வார் மாவட்டத்தின் பட்கல் பகுதியில் வகுப்புவாத பதட்டங்களைக் கையாள்வதில் திறமையானவர். 

மர்மமான முறையில் உயிரிழப்பு: 

இந்த நிலையில் நேற்று மாலை ஓம் பிரகாஷ்  தனது வீட்டில் மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். 68 வயதான அவரது உடலில் காயங்களுடன் உடலானது மீட்கப்பட்டதாக சொல்லப்பட்டது. 

பிரகாஷின் மகன் அளித்த புகாரின் பேரில் எச்.எஸ்.ஆர் லேஅவுட் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, பிரகாஷின் மரணம் குறித்து விசாரணையைத் தொடங்கினர். இந்த சம்பவத்தில் அவரது மனைவியின் பங்கு இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்துள்ளனர்.

"ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4.30 மணியளவில், பல்லவி தனது தோழிகளில் ஒருவருக்கு போன் செய்து, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் மனைவி, தான் ஒரு அரக்கனை (பிரகாஷ்) கொன்றதாகக் கூறினார். பின்னர் அவர் 112 ஐ டயல் செய்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன் அடிப்படையில்  வீட்டிற்குச் செல்லுமாறு நாங்கள உத்தவிட்டோம்.

"குற்றவியல் காட்சி அதிகாரி (SOCO) உடன் ஒரு போலீஸ் குழு வீட்டிற்குச் சென்றது. அப்போது வீட்டின் தரை தளத்தில் பிரகாஷ் இறந்து கிடந்தார், பல கத்திக்குத்து காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். சம்பவம் நடந்த நேரத்தில், அவரது மனைவி பல்லவி மற்றும் அவரது மகள் வீட்டில் இருந்தனர்," என்று போலீசார்  தெரிவித்தனர். 

மனைவியிடம் விசாரணை:

வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், ஓம் பிரகாஷின் மனைவி பல்லவியை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். காவலரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

"குடும்பத்திற்குள் சொத்து தகராறுகள் நடந்து கொண்டிருந்தன, இதனால் கொலையில் நெருங்கிய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக வலுவான சந்தேகம் எழுந்தது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அந்த காவலர் தனது நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார் என்று வழக்கை விசாரித்து வரும் மற்றொரு காவல்துறை அதிகாரி கூறினார். மேலும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய கூடுதல் காவல் ஆணையர் விகாஸ் குமார் விகாஷ், “மாலை 4.30 மணியளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஒரு கொலை நடந்திருப்பதைக் கண்டறிந்தனர்” என்றார்.

உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது என்றும், பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு கூடுதல் விவரங்கள் தெரியவரும் என்றும் குமார் கூறினார். குற்றத்தின் போது வீட்டில் ஓம் பிரகாஷ் உட்பட மூன்று பேர் (பிரகாஷ், அவரது மனைவி மற்றும் மகள்) இருந்ததாக அவர்  கூறினார்.

"அவர்களில் ஒருவர் கொலை தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார். வீட்டிலிருந்து ஒரு ஆயுதம் கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டிடம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஓம் பிரகாஷின் மகன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் புகார் பதிவு செய்யப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று விகாஷ் மேலும் கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola