பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்ட நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சையும் மீரா மிதுனும்
தன் சர்ச்சைக் கருத்துகளுக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் (Actress Meera Mithun) பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானார். தொடர்ந்து நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவர் சமுக வலைதளங்களில் தன் சர்ச்சைக்குரிய கருத்துகள், செய்கைகளால் ரசிகர்களை கடுப்பேற்றி வந்தார்.
மேலும், சூர்யா, விஜய், பாரதிராஜா உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களை, அரசியல் தலைவர்களையும் வம்பிழுத்து கருத்து தெரிவித்து சமூகவலைதளங்களில் களமாடி வந்த மீரா மிதுன் நெட்டிசன்களின் ட்ரோலுக்கு ஆளானார்.
பட்டயலின மக்கள் பற்றி கருத்து
பட்டியலின வுகுப்பினரை தரக்குறைவாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன், அவரது நண்பர் ஷாம் அபிஷேக்குடன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் வன்னி அரசு, சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் மீரா மிதுன் கைது செய்யப்பட்டார்.
சைபர் க்ரைம் போலீஸ் கைது
இதனைத் தொடர்ந்து, அவரை ஆகஸ்ட் 14ஆம் தேதி கேரளாவில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அவரின் நண்பர் ஷாம் அபிஷேக்கையும் கைது செய்த காவல் துறையினர், இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து இருவரும் ஜாமீன் பெற்று வெளிவந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆஜராகாத மீரா மிதுன்
தற்போது இந்த வழக்கின் சாட்சி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு நேற்று (ஆக.06) விசாரணைக்கு வந்தது. அப்போது, மீரா மிதுனும் அவரது வக்கீலும் ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதி, "சாட்சி விசாரணை தொடங்கிய நிலையில், மீரா மிதுன் ஆஜராகாமல் நீதிமன்றத்தை ஏமாற்றுவதாகத் தெரிகிறது. எனவே, அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கிறேன். வழக்கு விசாரணையை வருகிற 29ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்" என்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!
இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்