அதானி குழுமத்தின் பொது ஊடக முயற்சிகளை வழிநடத்த மூத்த பத்திரிகையாளர் சஞ்சய் புகாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.  


குஜராத்தின் அகமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அதானி குழுமம், பசுமை பொருளாதாரம், தூய்மை தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விமான நிலையம், துறைமுகம், வேளாண் வணிகம், ரியல் எஸ்டேட், நிதி சேவைகள், பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட பல்வேறு வணிகங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. இந்நிலையில், ஊடகத்துறையில் அதானி குழுமம் கால்பதிக்கத் தொடங்கியுள்ளது. அதன் தொடக்கமாக, சஞ்சய் புகாலியா  அதானி குழுமத்தின் ஊடகப்பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியராக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர், இந்த வார தொடக்கத்தில் தான் குயின்ட் டிஜிட்டல் மீடியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்த ராஜினாமா செய்தார். 


இதுகுறித்து அதானி குழுமம் வெளியிட்ட சுற்றறிக்கையில்,"வணிகம், அரசியல் மற்றும் நிதி ஆகிய பிரிவுகளில் அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிக்கையாளர். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களில் பல்வேறு ஊடக நிறுவனங்கள் தொடங்குவதற்கு உதவியுள்ளார்.  சிஎன்பிசி அவாஸ் தொலைக்காட்சியை நிறுவி, அதற்கு 12 ஆண்டுகள் தலைமை தாங்கியவர். ஹிந்தியில் ஸ்டார் நியூஸ் ஊடக நிறுவனத்தை தொடங்கி வைத்தார். ஜீ செய்தி நிறுவனத்துக்குத் தலைமை தாங்கியதோடு, ஆஜ் தக் நிறுவனத்தின் நிறுவன உறுப்பினராக இருந்தார்.     


பிசினஸ் ஸ்டாண்டர்ட், நவபாரத் டைம்ஸ் உள்ளிட்ட இதழ்களில்  பத்திரிகையாளராக பணியாற்றவர். 90-களில் பிபிசி இந்தி வானொலியில் இடம்பெற்ற எண்ணற்ற நிகழ்ச்சியில் பங்களித்தவர்.      




அதானி குழுமத்தின் பல்வேறு வகையான வணிக முயற்சிகளுக்கும், தேசத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கும்,  ஊடகவியலாளர் சஞ்சய் புகாலியாவின் பரந்த நிபுணத்துவம் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று அதானி குழுமம் தெரிவித்தது.   


சமீப காலங்களில், தனியார் பெருநிறுவனங்கள் ஊடகத் துறையில் கால்பதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. முன்னதாக, ரிலையன்ஸ் குழுமம் நெட்வொர்க்-18 ஐ  ரிலையன்ஸ் குழுமம்  வாங்கியது. இது, இந்தியா ஊடகத் துறையில் மிகப்பெரிய திருப்புமுனையாக கருதப்படுகிறது.    


அதானி குழுமம் முதலில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத் தளங்களில் கால்பதிக்கும் என்று யூகிக்கப்படுகிறது. ரிலையன்ஸ் குழுமத்தைப் போல், அதானி குழுமமும் ஏற்கனவே செயல்பட்டு வரும் நிறுவனங்களை விலை கொடுத்து வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.  


மேலும், வாசிக்க: 


Gautam Adani Profile: ‛அதானி... அதானி... அதானி....’ குஜராத் டூ குளோபல் டிரேட் வரை பேசப்பட்ட யார் அந்த அதானி?


Adani group | என்னதான் ஆச்சு..? திடீரென சரிந்த அதானி குழுமத்தின் பங்குகள் - மறுக்கும் நிறுவனம்!