இந்தியாவில் சமீப காலங்களாக உணவு டெலிவரி செயலிகளான சோமேட்டோ, ஸ்விகி ஆகியவற்றில் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் மிகவும் அதிகமாகியுள்ளது. அதிலும் குறிப்பாக கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து பணி செய்யும் பலரும் தங்களுடைய உணவு தேவையை இந்த செயலிகள் மூலம் ஆர்டர் செய்து வருகின்றனர். இதன்காரணமாக இந்தியாவில் இந்த செயலிகள் மிகவும் பிரபலம் அடைந்துள்ளன. 


இந்நிலையில் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் இந்த உணவு டெலிவரி செயலிகளுக்கு 5 சதவிகிதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம்,”உணவு டெலிவரி செயலிகளுக்கு ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வரி சலுகைகள் எதுவும் அளிக்கப்படாது. அதேபோல் இந்த செயலிகளை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்ட வரவேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. 


 


இதை கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்தோம். அதன்படி வரும் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் இந்த செயலியில் ஆர்டர் செய்யும் உணவுகளுக்கு 5 % கூடுதல் வரி விதிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது. 




5% கூடுதல் வரியால் நமக்கு பாதிப்பு உண்டா?


உண்மையில் இந்த வரியை மத்திய அரசு உணவு டெலிவரி செய்யும் செயலிகளிடம் இருந்து தான் பெற்று வருகிறது. ஆனால் இந்த உணவு டெலிவரி செயலிகள் அதை மறைமுகமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் என்று கூறப்படுகிறது. எனவே வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் உணவு ஆர்டர் செய்யும் போது அதன் விலை அதிகமாகும் வாய்ப்பு உள்ளது. 


இதற்கு முன்பாக உணவு டெலிவரி செயலிகளில் நாம் ஆர்டர் செய்யும் உணவிற்கு ஓட்டல்கள் 5% வரியை செலுத்தி வந்தன. தற்போது அந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வரியை இனிமேல் உணவு டெலிவரி செய்யும் செயலிகள் மீது விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


 


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


 


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் படிக்க: PF அக்கவுண்ட் இருக்கா? 31ம் தேதிக்குள்ள இதையெல்லாம் கண்டிப்பா பண்ணிடுங்க!!