Share Marke Closing Bell: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் இன்று சரிவுடன் நிறைவடைந்தது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 887.64 அல்லது 1.31% புள்ளிகள் குறைந்து 66,684.26 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 205.60 அல்லது 1.17%புள்ளிகள் உயர்ந்து 19,745.00 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
கடந்த இரண்டு வாரங்களாக சென்செக்ஸ் 66 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமானது. அமெரிக்க பங்குச்சந்தைகள் பாசிட்டிவாக நிறைவடைந்தது. வரலாற்றில் முதன் முறையாக சென்செக்ஸ் 67 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை படைத்திருந்தது. அப்படியிருக்க, இன்று சென்செக்ஸ் 6 நாட்களுக்கு தொடர்ந்து உயர்ந்து வந்த சென்செக்ஸ், 800 புள்ளிகள் சரிந்தது. சில நிறுவனங்களின் முதல் காலாண்டு லாபம் எதிர்பார்த்த அளவு இல்லை. உள்ளூர் நிறுவனங்கள் பங்குகளை விற்றன. சர்வதேச அளவிலும் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.
பல்வேறு நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்பனை செய்தது பங்குச்சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. நிஃப்டை பொறுத்தவரையில் ஸ்மால்கேப் 100 நிறுவனங்கள் பெரிதாக பர்ஃபார்ம் செய்யவில்லை.
சென்செக்ஸ் இப்படி திடீரென சரிவை சந்திக்கும் என முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கவில்லை என்கின்றனர்.
லாபத்துடன் வர்த்தகமாகி வரும் நிறுவனங்கள்:
லார்சன், என்.டி.பி.சி., பாரத ஸ்டேட் வங்கி, பி.பி.சி.எல்., கோடாக் மஹிந்திரா வங்கி, டாடா மோட்டர்ஸ், டிவிஸ் லேப்ஸ்,. ஹீரோ மோட்டர்கார்ப் ,ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரதி ஏர்டெல், அப்பல்லோ மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்தில் வர்த்தகமான நிறுவனங்கள்:
இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, ஹெச்.சி.எல்., விப்ரோ, டி.சி.எஸ்., எஸ்.பி.ஐ. லைப் இன்சுரா, ஹிண்டால்கோ, ஜெ.எஸ்.டபுள்யு.,அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தஸ்லேண்ட் வங்கி, க்ரேசியம், டாக்டர். ரெட்டி லேப்ஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, சிப்ளா,. அதானி போர்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஐ.டி.சி.,டாடா ஸ்டீல், பஜார்ஜ் ஃபின்சர்வ், அதானி எண்டர்பிரைசர்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், சன் பார்மா, மாருது சுசூகி உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
மேலும் வாசிக்க..