முதலமைச்சர் ஸ்டாலின் ஏபிபி நாடுவிற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், தனது தனிப்பட்ட வாழ்வு தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.


ஏபிபி செய்திதளம்..!


ஊடகத்துறையில் 100 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் கொண்ட ஏபிபி நிறுவனம், தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியோடு இணையதளங்கள் வாயிலாக பொதுமக்களிடையே நாட்டின் அன்றாட நிகழ்வுகளை கொண்டு சேர்க்கும் முடிவுடன் இணைய ஊடகத்தில் களமிறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தான், கடந்த 2021ம் ஆண்டு ஏபிபி நாடு எனும் இணைய செய்தி தளம் அறிமுகமானது. அதன் மூலம் தமிழ் மக்களுக்கான செய்திகளை வேகமாகவும், துல்லியமாகவும் வழங்கி வருகிறது.  இந்நிலையில், உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் ஏபிபி நாடுவின்  பணியை ஊக்குவிக்கும் விதமாக முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில் மக்கள் மனதில் தொடரும் சந்தேகங்களை ஏபிபி நாடு கேள்வியாக எழுப்ப, முதலமைச்சர் ஸ்டாலின் அதற்கு விரிவான பதில்களை தந்துள்ளார். 


முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி:


பல்வேறு அரசியல் சூழல்கள், எதிர்க்கட்சிகளின் கூட்டணி, விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை, பாஜக மீதான பாய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் உடன், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்பாகவும் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. 



ஸ்டாலின் சொன்ன ஒன்-லைனர்ஸ்:


இந்தப் பெயர்களைக் கேட்டவுடன் தங்களின் நினைவில் வருபவை என்ன என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.


தந்தை பெரியார் - பகுத்தறிவு-சுயமரியாதை


பேரறிஞர் அண்ணா - இனம், மொழி உணர்வு


கலைஞர் - மரணத்திலும் சளைக்காத போராளி


எம்.ஜி.ஆர் - என்னை ஊக்கப்படுத்தியவர்


ஜெயலலிதா - பிடிவாதம்


நரேந்திர மோடி - குஜராத் முதல்வராக இருந்தபோது மாநில உரிமை


பேசியவர்


ராகுல்காந்தி - இந்தியாவின் நம்பிக்கை


- நிதிஷ்குமார் - சமூக நீதியின் வடஇந்தியக் குரல்


அன்பில் மகேஸ் பொய்யாமொழி - என் நண்பரின் திறமைமிகுந்த மகன்


மு.க.அழகிரி - எப்போதும் அண்ணன்


துரைமுருகன் - கழகத்தின் அனுபவப் பெட்டகம்


துர்கா ஸ்டாலின் - நீ பாதி-நான் பாதி


அழகிரி அவ்வளவு தானா?


அழகிரி தொடர்பான கேள்விக்கு அரசியல் தொடர்பான எந்த கருத்தையும் கூறாமல், எப்போதும் அண்ணன் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், கடைசி அழகிரிக்கு அரசியலிலும், திமுகவிலும் எந்த இடமும் இல்லை, அவர் குடும்ப உறுப்பினர் மட்டுமே என கூற வருகிறாரோ என்றும் கருதப்படுகிறது.