நாட்டில் யு.பி.ஐ (UPI) என்று அழைக்கப்படும் யுனைட்டெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் உதவியுடன் ஸ்மார்ட் போன்கள் மூலம் பணம் செலுத்தும் முறை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு ஸ்மாட்ஃபோன் மற்றும் தொடர்பு எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் யூ.பி.ஐ. மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
இந்தாண்டு தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி, Feature Phone எனும் கீபேட் கொண்ட பேசிக் மாடல் ஃபோன்களைப் பயன்படுத்துவோரு டிஜிட்டல் பேமேண்ட்ஸ் முறையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India (SBI)) இனி கீபேட் மாடல் ஃபோன்களில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படமாட்டது என்று அறிவித்துள்ளது. unstructured supplementary service data மூலம் இனி எவ்வித கட்டணமுமின்றி பண பரிமாற்றம் மேற்கொள்ளலாம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ள டிவிட்டர் அறிவிப்பில்,” அன்பார்ந்த வாடிக்கையாளர்களே! பேசிக் மாடல் மொபைல் மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு இனி கட்டணம் கிடையாது. கூடுதல் கட்டணமின்றி இனி நீங்கள் பண பரிமாற்றம் செய்யலாம். டிஜிட்டல் பேமெண்ட் சேவைகளுக்கு *99# என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும். எங்கள் வங்கி சேவைகள் இனி முற்றிலும் இலவசமாக கிடைக்கும். குறிப்பாக, டிஜிட்டல் பேமேண்ட் சேவைகளை பயன்படுத்தும் ’feature phone' அதவாது கீபேட் மொபைல் பயனாளர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைகளில், பணம் அனுப்புவது, பணம் செலுத்தும்படி கேட்பது, வங்கி கணக்கின் இருப்பு குறித்து தெரிந்து கொள்வது, மினி ஸ்டேட்மெண்ட் பெறுதல், யூ.பி.ஐ. PIN எண்ணை மாற்றுவது ஆகியவைகள் கட்டணிமின்றி கிடைக்க உள்ளன. இவை USSD services கீழ் செயல்படுகிறது.
மேலும் வாசிக்க...