உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங்கைத் தடுக்க அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விடுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. 


எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:


* 2009ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவுப்படி ராகிங் சட்டப்படி குற்றமாகும். 


* பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956-ன் படி, உயர் கல்வி நிறுவனங்களில் ராகிங் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்முறையை அனைத்து கல்வி நிறுவனங்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். 


* இந்த நடைமுறைகளை மீறினால் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். 


* ராகிங்குக்கு எதிரான குழு மற்றும் ராகிங் எதிர்ப்புப் படை அமைக்கப்பட வேண்டும். 


* ராகிங் எதிர்ப்பு செல் அமைக்கப்பட்டு முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். 


* ராகிங்குக்கு எதிரான கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். ராகிங் தடுப்பு அலுவலர்களின் முழு விவரங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். 




* எச்சரிக்கை மணியையும் முக்கிய இடங்களில் பொருத்த வேண்டும் 


* மாணவர்களுடன் தொடர்ந்து உரையாடி, பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஆலோசனை அளிக்க வேண்டும். 


* உயர் கல்வி நிறுவனங்களின் மின்னணு புத்தகங்கள், கையேடுகளில் ராகிங் எதிர்ப்பு எச்சரிக்கைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 


* விடுதிகள், உணவகங்கள், கழிப்பறைகளில் ராகிங் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான போஸ்டர்களை ஒட்ட வேண்டும்.


* விடுதிகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட வேண்டும்.


* மாணவர்கள் இருக்கும் இடங்கள், உணவகங்கள், கழிப்பறைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் ராகிங் எதிர்ப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட வேண்டும்.


* மாணவர் சேர்க்கை மையம், துறை அலுவலகங்கள், நூலகம், உணவகங்களில் ராகிங்குக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற வேண்டும். 8 * 6 என்ற அடி அளவில் போஸ்டர்கள் இருக்க வேண்டும். 


* ராகிங் செய்ய மாட்டேன் என்று மாணவர்களும் பெற்றோரும் https://antiragging.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கூடுதல் விவரங்களுக்கு: www.ugc.ac.in 


09818044577 (அவசர காலத்துக்கு மட்டும்).


மேலும் வாசிக்க: Flu in Tamil Nadu: தமிழகத்தில் அதிகரிக்கும் காய்ச்சல்; காரணம் என்ன? மருந்துகள், தடுப்பது எப்படி?