Petrol and diesel prices Today: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிப்பு

நேற்று மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் வாரத்தின் முதல் நாளில் அதிகரித்துள்ளது.

Continues below advertisement

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. சென்னையில் தேர்தல் முடிவுக்கு முன்பு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.92.43-க்கும், டீசல் லிட்டருக்கு ரூ.85.75-க்கும் விற்பனை செய்யப்பட்டது.  

Continues below advertisement

இந்நிலையில், தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 12 காசு அதிகரித்து ரூ.92.55க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசு அதிகரித்து ரூ.85.90க்கு விற்பனையானது. அதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைவை விட அதிகம் உயர்ந்தே காணப்பட்டு வருகிறது.சென்னையில் கடந்த மே 16ஆம் தேதி  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.94.31க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.88.7க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்தும், எந்த மாற்றமும் இன்றியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.86க்கும், இதேபோல், ஒரு லிட்டர் டீசல்  ரூ.88.87க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

Faf du Plessis Health : நினைவை இழந்த ஃபாப் டூப்லெஸிஸ் - சோகத்தில் ரசிகர்கள்!

இந்நிலையில், சென்னையில் கடந்த 25ஆம் தேதி பெட்ரோல் விலை 95 ரூபாய் தாண்டி வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 20 காசு அதிகரித்து ரூ.95.06க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், ஒரு லிட்டர் டீசலின் விலை 24 காசு அதிகரித்து ரூ.89.11க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் விலை 96 ரூபாயை தாண்டியது. இதனைத்தொடர்ந்து, பெட்ரோல் விலை 97 ரூபாய் தாண்டிய நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு கொடைக்கானலில் 100 ரூபாயை கடந்து மேலும் அதிர்ச்சியை கொடுத்தது. 


இந்நிலையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 26 காசு உயர்ந்து ரூ.97.69க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 28 காசு உயர்ந்து ரூ.91.92க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. ஒரு நாள் விலை உயர்வும், ஒருநாள் மாற்றமின்றியும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை பொறுத்த வரை திமுக ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என பிரசாரத்தின் போது முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி தேர்தல் அறிக்கையாகவும் வெளியிடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்து ஒருமாதம் ஆன நிலையில் பெட்ரோல் விலை குறைக்கக்கோரி பலர் வலியுறுத்துகின்றனர். அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முதலமைச்சர் செல்லும் சாலைகளில், பாதுகாப்பு பணிகளில் பெண் காவலர்களை ஈடுபடுத்தவேண்டாம் என உத்தரவு..!

Continues below advertisement
Sponsored Links by Taboola