search
×
ABP premium story Premium

Time Deposit Scheme: ஒரே முறை டெபாசிட் செய்யுங்கள்! ஆண்டுக்கு ரூ.1.12 லட்சம் வருமானம் - போஸ்ட் ஆஃபீஸ் திட்ட விவரம் இதோ!

Post Office Time Deposit Scheme in Tamil: ஒரு முறை முதலீட்டால் வீட்டிலிருந்தபடியே ஆண்டிற்கு ஒரு லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வகையிலான, சேமிப்பு திட்டம் தபால் அலுவலகத்தில் உள்ளது.

FOLLOW US: 
Share:

Post Office Time Deposit Scheme Details in Tamil: வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்டுவதற்கு உதவும்,  தபால் அலுவலக ஒன்டைம் டெபாசிட் திட்டம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம்:

கையில் இருக்கும் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்துவிட்டு, வீட்டில் இருந்தபடியே வருமானம் ஈட்ட விரும்புவோருக்கு தபால் அலுவலகத் திட்டத்தில் முதலீடு செய்வது சரியான தேர்வாக இருக்கும். அந்த வகையில் ஒன் டைம் டெபாசிட் என்பதும் சேமிக்க விரும்புவோருக்கு, நல்ல திட்டமாகும்.  இந்த கணக்கை தபால் அலுவலகத்தில் தனிநபரகாவும், கூட்டுக் கணக்காகவும் தொடங்கலாம். 18 வௌஅதை பூர்த்தி செய்த 3 பேர் சேர்ந்து இந்த கணக்கை தொடங்கலாம்.

ஒருநபர் எத்தனை கணக்கை வேண்டுமானாலும் தொடங்கலாம். 10 வயதை பூர்த்தி செய்த சிறுவனின் பெயரில் கணக்கை தொடங்கலாம். மைனருக்கான கார்டியனின் பெயரில் கணக்கை தொடங்கலாம். இந்தக் கணக்கைத் திறந்து முதலீடு செய்பவருக்கு, வட்டி வருவாய் ஆண்டிற்கு ஒருமுறை மொத்தமாக வழங்கப்படும். இந்தத் திட்டம் உத்தரவாதமான வருமான ஆதாரத்தை வழங்குகிறது.

ஒன் டைம் டெபாசிட் திட்டம்:

இந்த கணக்கில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் தொடங்கி வரம்பின்றி எவ்வளவு பெரிய தொகையையும் முதலீடு செய்யலாம்.  இந்த கணக்கை ஒரு வருடம், 2 வருடம், 3 வருடம் மற்றும் 5 வருடம் என  நான்கு ஆப்ஷன்களில் தொடங்கலாம். அதன்படி வட்டி விகிதமும் மாற்றமடையும். ஒரு வருட திட்டத்திற்கு 6.9 சதவிகிதமும், 2 வருட திட்டத்திற்கு 7.0 சதவிகிதமும், 3 வருட திட்டத்திற்கு 7.1 சதவிகிதமும், 5 வருட திட்டத்திற்கு 7.5 சதவிகிதமும் வட்டியாக வழங்கப்படுகிறது.

காலாண்டிற்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டு, ஆண்டிற்கு ஒருமுறை பயனாளரின் சேமிப்பு கணக்கில் வட்டித்தொகை செலுத்தப்படுகிறது. 80C ஆவணத்தின் மூலம் இந்த வருவாய்க்கு, ஒன்றரை லட்சம் ரூபாய் வரையில் வரி விலக்கும் பெறலாம். சுய விருப்பத்தின் அடிப்படையில் திட்டத்திற்கான கால அவகாசத்தை பயனர்கள் நீட்டித்துக் கொள்ளலாம். 2/3/5 வருட TD கணக்கு 1 வருடம் முடிந்தபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவதற்கு முன்கூட்டியே மூடப்பட்டால், அவற்றிற்கான TD வட்டி விகிதத்தை விட 2% குறைவாக வட்டி கணக்கிடப்படும். முதல் 6 மாதங்களுக்கு முதலீட்டு தொகையை திரும்பப் பெறமுடியாது.

லாபக் கணக்கு எப்படி?

உதாரணமாக பயனர் இந்தத் திட்டத்தில் ரூ.15 லட்சத்தை 5 ஆண்டு திட்டத்தில் முதலீடு செய்யும் ஒரு சூழலை கருத்தில் கொள்வோம். 7.5 சதவீத வருடாந்திர வட்டி விகிதத்தில், அவர் ஆண்டுக்கு ரூ.1,12,000 வட்டியாக பெறுவார். 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வட்டி மூலம் வருமானம் ஈட்டப்பட்டால், TDS பிடித்தம் செய்யப்படும். அதுவே மூத்த குடிமக்களாக இருந்தால், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டினால் மட்டுமே TDS பிடித்தம் செய்யப்படும். அஞ்சலக டிடி கணக்கை ஷெட்யூல் செய்யப்பட்ட அல்லது கூட்டுறவு வங்கிகளில் பத்திரமாக அடகு வைக்கலாம்.

Published at : 22 Mar 2024 08:07 PM (IST) Tags: post office post office scheme savings scheme Investment

தொடர்புடைய செய்திகள்

Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?

Income Tax Rate Cuts: தேர்தலில் சறுக்கல்..! பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க மோடி அரசு ஆலோசனை, யாருக்கு ஜாக்பாட்?

EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!

EPFO: பி.எஃப்., பயனாளர்களே.. திட்டச் சான்றிதழ் பற்றி தெரியுமா? பென்ஷன் வாங்க இது ரொம்ப முக்கியம்பா..!

IT Return Filing 2024: ஐடி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்கிறீர்களா? இந்த ஆவணங்கள் கைவசம் இருப்பது அவசியம்..!

IT Return Filing 2024: ஐடி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்கிறீர்களா? இந்த ஆவணங்கள் கைவசம் இருப்பது அவசியம்..!

ITR 2024: புகைப்படம், முகவரி, தொலைபேசி எண்ணை ஐடி போர்ட்டலில் மாற்றுவது எப்படி? எளிதான வழிமுறை இதோ..!

ITR 2024: புகைப்படம், முகவரி, தொலைபேசி எண்ணை ஐடி போர்ட்டலில் மாற்றுவது எப்படி? எளிதான வழிமுறை இதோ..!

EPFO Rules Changed: இனி பி.எஃப்., கணக்கில் கோவிட் 19 அட்வான்ஸ் பணம் வழங்கப்படாது - EPFO அறிவிப்பு

EPFO Rules Changed: இனி பி.எஃப்., கணக்கில் கோவிட் 19 அட்வான்ஸ் பணம் வழங்கப்படாது - EPFO அறிவிப்பு

டாப் நியூஸ்

TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

TN Assembly Session LIVE: இன்று கூடுகிறது சட்டமன்ற கூட்டத்தொடர் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

வெளுத்து வாங்கிய கனமழை: வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

வெளுத்து வாங்கிய கனமழை: வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

'ஆளுங்கட்சியினரின் ஆதரவே கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம்' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

'ஆளுங்கட்சியினரின் ஆதரவே கள்ளச்சாராய விற்பனைக்கு காரணம்' - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு 32 ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்

Breaking News LIVE: கள்ளச்சாராய உயிரிழப்பு 32 ஆக உயர்வு - சிபிசிஐடி விசாரணை அதிகாரி நியமனம்