லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) பயனளிக்கும் புது திட்டங்களை, பாதுகாப்பான திட்டங்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் இருக்கிறது. இன்சூரன்ஸ் திட்டங்களைத் தாண்டி, மேலும் பல பயன்களை தனது முதலீட்டாளர்களுக்கு இது தருகிறது. இப்போது அறிமுகமாயிருக்கும் புதிய திட்டத்தின் பெயர் ஜீவன் லாப் திட்டம் (Jeevan Labh Scheme). இதற்கு நீங்கள் கட்டும் பிரீமியத்திற்கு வருமான வரி விதி செக்ஷன் 80சியின் அடியில் விலக்கும் அளிக்கப்படுகிறது.
மேலும், மூன்று வருடம் பிரீமியம் கட்டியிருப்பது, முதலீட்டின் அடிப்படையில் லோன் வாங்கும் வசதியையும் தருகிறது. இந்த திட்டம் பாதுகாப்பான திட்டம் எனவும் நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆகவே, சரியான நேரத்தில் முதலீடு செய்வது நல்ல பயன்களைத் தரும்.
மாதத்திற்கு வெறும் 233 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், அதாவது ஒரு நாளுக்கு எட்டு ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், 17 இலட்சம் வரை பெற முடியும்.
இந்த திட்டத்திற்கான வயது வரம்பு 8 முதல் 59 வரை. இன்சூரன்ஸ் பணத்திற்கு அதிகபட்ச வரம்பு இல்லையென்றாலும் குறைந்தபட்ச வரம்பு இரண்டு இலட்சம்.
ஏற்கனவே கூறியுள்ளபடி, பிரீமியம் பணத்தைக் கட்டுவது லோன் வசதியையும் ஏற்படுத்தித் தருகிறது. இப்படியான நன்மைகள் இருப்பது இதை பாதுகாப்பான, நல்ல பலன்களை நல்கும் திட்டமாக ஆக்குகிறது.
முதலீடு செய்பவர் இறக்கும் சூழ்நிலையில் அவரால் பரிந்துரைக்கப்பட்டவர் திட்டத்தின் பயன்களுடன் மேலும் ஒரு கூட்டுத்தொகையையும் பெறுவார். முழு பிரீமியம் பணத்தைக் கட்டியிருப்பது மேலும் பயன்களைப் பெறுவதை உறுதி செய்யும். கட்டப்படும் பிரீமியத்திற்கு வருமான வரி விதி செக்ஷன் 80சியின் படி விலக்கும் அளிக்கப்படுகிறது என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டியது.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்