search
×

Personal Loan Types: இதுக்கெல்லாம் பர்சனல் லோன் கிடைக்குமா? - இந்திய வங்கிகளில் உள்ள வாய்ப்புகள் என்னென்ன..!

Personal Loan Types: இந்தியாவில் உள்ள வங்கிகளில் எதற்கெல்லாம், எந்தெந்த வகைகளில் எல்லாம் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

FOLLOW US: 
Share:

Personal Loan Types: இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுற்றுலா பயணம் தொடங்கி திருமணம் வரை என, பல்வேறு விதங்களில் தனிநபர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தனிநபர் கடன்கள்(Personal Loan):

பணப்புழக்கம் குறைவாக இருக்கும் போது பெரிய செலவுகளுக்கு உதவ தனிநபர் கடன்கள் சிறந்த வழியாகும். தனிநபர் கடனின் ஒரு முக்கிய நன்மை என்னவென்றால், கடனுக்கான எந்த பிணையத்தையும் வழங்காமல் பயனர் இந்த விருப்பத்தைப் பெறலாம். திருமணக் கடன்கள் முதல் பயணக் கடன்கள் வரை என வாடிக்கையாளர்களுக்கு இப்போது பல வகையான தனிநபர் கடன்கள் உள்ளன. அந்த வகையில், இந்தியாவில் தனிநபர்கள் வழங்கும் பல்வேறு வகையான தனிநபர் கடன்கள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

திருமண கடன் (Wedding Loan):

இந்தியாவில் திருமணங்கள் ஒரு வழக்கமான நிகழ்வாக மட்டுமின்றி,  ஒரு பெரிய கொண்டாட்டத்திற்கான காரணியாகவும் உள்ளது. இந்த கொண்டாட்டங்கள் பெரும்பாலும் நமது செலவினங்களில் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன. திருமணத்திற்கான இடம்,  கேட்டரிங், நிகழ்வுகள், நகைகள் மற்றும் பல விஷயங்கள் வரை அடுத்தடுத்து செலவுகள் குவியும். இதனை சமாளிக்கும் வகையில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு திருமண கடன்களை வழங்குகிறார்கள். திருமண வரவு செலவை நிர்வகிக்க மணமகள், மணமகன் அல்லது அவர்களது குடும்ப உறுப்பினர்கள் திருமணக் கடனைப் பெறலாம்.

பயணக் கடன் (Travel Loan): 

அதிகரித்து வரும் பயணப் பழக்கத்தால் பொதுமக்கள் புதிது புதிதாக பல இடங்களை கண்டு மகிழ ஆர்வம் காட்டுகின்றனர். இந்த பயணங்கள் மனதிற்கு இதமான அனுபவத்தை வழங்கினாலும், பட்ஜெட்டில் அது சாத்தியமில்லாமல் இருக்கலாம். விமானங்கள், தங்குமிடங்கள், ஷாப்பிங் மற்றும் பலவற்றுடன் தொடர்புடைய செலவுகளைச் சமாளிக்க உங்களுக்கு உதவ, நிதி நிறுவனங்கள் பயணங்களுக்கான தனிநபர் கடன்களை வழங்குகின்றன. தேனிலவு அல்லது குடும்பம் மற்றும் நண்பர்கள் உடனான பயணத்திற்கு திட்டமிட இந்த கடன் தனிநபர் கடன் திட்டம் உதவும்.

கல்வி கடன் (Educational Loan):

கடன் வழங்குநரக்ள் கல்விக் கடன்கள் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி இலக்குகளை நனவாக்க உதவுகிறார்கள். அதோடு,  உயர் கல்வியைப் பெறுவதற்கான அவர்களின் கனவுகளை அடைய உதவுகிறார்கள், மாணவர்களிடம் பணப்புழக்கம் இல்லாவிட்டாலும் கூட கல்விச் செலவுகள், கல்லூரி அல்லது பள்ளிக் கட்டணம் அல்லது இதுபோன்ற பிற கல்விச் செலவுகளை ஈடுகட்ட கல்விக் கடன் உதவுகிறது.

வீடு சீரமைப்புக் கடன் (Home Renovation Loan):

வீடுகளை பழுதுபார்த்தல், மறுவடிவமைப்பு செய்தல் அல்லது புதுப்பித்தல் தொடர்பான செலவினங்களைச் சமாளிக்க,  தனிநபர்களுக்கு வீடு சீரமைப்புக் கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரே நேரத்தில் நிதியை ஏற்பாடு செய்யாமல் தங்கள் வீட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும். 

திருவிழா கடன் (Festival Loan):

துர்கா பூஜை, தீபாவளி, ஓணம் மற்றும் பல பண்டிகைகள் உட்பட இந்தியாவில் பண்டிகை காலம் என்பது நீண்டது. இந்த காலகட்டத்தில் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஒன்று கூடி கொண்டாடும் போது, செலவு என்பது அதிகரிக்கத்தான் செய்யும். இந்த சூழலை சமாளிக்க ஏதுவாக பண்டிகைக் கடன் வழங்கப்படுகிறது. 

மருத்துவ அவசர கடன் (Medical Emergency Loan):

உடல்நலனில் அவசரநிலை என்பது முன்கூட்டியே அறிவித்து வருவதில்லை. ஆனால், அவை பெரும்பாலும் தனிநபர்கள் அல்லது குடும்பங்களுக்கு பெரும் நிதி அழுத்தத்தை ஏற்படுத்தும். அப்படி ஏற்படும் மருத்துவமனை மற்றும் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க தான் மருத்துவ அவசரக் கடன்களை வழங்கப்படுகின்றன.  

நுகர்வோருக்கான நீடித்த கடன் (Consumer Durable Loan):

நுகர்வோர் நீடித்த கடன் என்பது வாடிக்கையாளர்களுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காட்சிகள், மடிக்கணினிகள், ஸ்மார்ட்போன்கள் போன்ற விலையுயர்ந்த உபகரணங்களை வாங்க உதவும் தனிப்பட்ட கடனாகும்.  கூடுதலாக, விவசாயம் மற்றும் கடன் ஒருங்கிணைப்பு செலவுகளுக்காகவும் தனிப்பட்ட கடன்கள் வழங்கப்படுகிறது.  வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்தும் வரலாறு இருந்தால் மட்டுமே இதுபோன்ற கடன்கள் கிடைக்கும். 

தனிநபர் கடனைப் பெறுவது எவ்வளவு எளிதாக இருந்தாலும், கடன் வழங்குபவர்கள் இந்தக் கடன்களில் அதிக ஆபத்து இருப்பதால் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே இந்தக் கடன்களைப் பெறும்போது ​​அவற்றைச் சார்ந்திருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளாமல், சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதிசெய்ய கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

Published at : 04 Jan 2024 11:33 AM (IST) Tags: loans Education loan personal loan personal loans wedding loan types of personal loan medical emergency loan Different Types of Personal Loans

தொடர்புடைய செய்திகள்

TDS Status: பான் கார்ட் உதவியுடன் டிடிஎஸ் நிலையை கண்டறிவது எப்படி? வழிமுறைகள் இதோ..!

TDS Status: பான் கார்ட் உதவியுடன் டிடிஎஸ் நிலையை கண்டறிவது எப்படி? வழிமுறைகள் இதோ..!

Financial Plan: கையில் காசே இல்லை என்ற நிலை வரக்கூடாதா? இதோ உங்களுக்கான எளிதான 7 டிப்ஸ்..!

Financial Plan: கையில் காசே இல்லை என்ற நிலை வரக்கூடாதா? இதோ உங்களுக்கான எளிதான 7 டிப்ஸ்..!

Rule 72 : விதி 72 கேள்விப்பட்டிருக்கீங்களா? உங்க முதலீடு எப்போ இரட்டிப்பாகும் தெரியுமா? கால்குலேட்டர கவனிங்க

Rule 72 : விதி 72 கேள்விப்பட்டிருக்கீங்களா? உங்க முதலீடு எப்போ இரட்டிப்பாகும் தெரியுமா? கால்குலேட்டர கவனிங்க

Atal Pension Yojana: மாதம் வெறும் ரூ.210, சாகும் வரை ரூ.60,000 பென்ஷன் - அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தெரியுமா?

Atal Pension Yojana: மாதம் வெறும் ரூ.210, சாகும் வரை ரூ.60,000 பென்ஷன் - அடல் பென்ஷன் யோஜனா திட்டம் தெரியுமா?

ITR 2024: AIS-இல் வந்தது புதிய மாற்றம்..! வரி செலுத்துவோருக்கு என்ன நன்மை தெரியுமா?

ITR 2024: AIS-இல் வந்தது புதிய மாற்றம்..!  வரி செலுத்துவோருக்கு என்ன நன்மை தெரியுமா?

டாப் நியூஸ்

Crime: கொடூரம்! சட்டக்கல்லூரி வளாகத்திலே மாணவர் படுகொலை - முன் விரோதத்தால் வெறிச்செயல்

Crime: கொடூரம்! சட்டக்கல்லூரி வளாகத்திலே மாணவர் படுகொலை - முன் விரோதத்தால் வெறிச்செயல்

Palani Murugan: பக்தர்களே! பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - பங்கேற்க எப்படி விண்ணப்பிப்பது?

Palani Murugan:  பக்தர்களே! பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு - பங்கேற்க எப்படி விண்ணப்பிப்பது?

Dindugal: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு - சிக்கியது எவ்வளவு?

Dindugal: திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு - சிக்கியது எவ்வளவு?

அதிர்ச்சி! வெடித்து சிதறிய ‘பைக்’ பெட்ரோல் டேங்க்.. பதறிய மக்கள் - கூலி தொழிலாளி படுகாயம்

அதிர்ச்சி! வெடித்து சிதறிய  ‘பைக்’ பெட்ரோல் டேங்க்.. பதறிய மக்கள் - கூலி தொழிலாளி படுகாயம்

உங்கள் ப்ரௌசிங் அனுபவத்தை மேம்படுத்தவும் சிறப்பு பரிந்துரைகளை வழங்கவும் இந்த வலைத்தளம் குக்கீகள் அல்லது ஒத்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள்.