பசிக்கும் நேரத்தில் வயிரை நிரப்புவதற்காக பல துரித உணவுகள் சந்தையில் வந்துவிட்டன. அதில் முக்கியமானது நூடுல்ஸ். இரண்டு நிமிடங்களில் சமைத்துவிடலாம் என விளம்பரங்கள் மனதில் அதிவேக சமையலை பதியவைத்து நூடுல்ஸ் கிராமங்கள் வரை சென்றுவிட்டன. பிரபல நூடுல்ஸான மேகிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. தற்போது மேகி தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே வெளியிட்டுள்ள செய்தி பலரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. தங்களது தயாரிப்புகளில் 60%க்கும் அதிகமானவை ஆரோக்கியமானவை அல்ல என நெஸ்லே நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. மேகி நூடுல்ஸ், நெஸ்கஃபே காபி, குளிர்பானங்கள், செல்லப்பிராணிகளுக்கான உணவு வகைகள், ஊட்டச்சத்து சார்ந்த உணவு பொருட்கள் என பல தயாரிப்புகளை  நெஸ்லே தயாரித்து சந்தையில் விற்பனை செய்து வருகிறது.




இங்கிலாந்தைச் சேர்ந்த வணிக பத்திரிகை நிறுவனமான பினான்சியம் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, 37% நெஸ்லே தயாரிப்புகள் ஆஸ்திரேலிய ஆரோக்கிய மதிப்பீட்டில் 3.5க்கும் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன. அந்த நிறுவனத்தின் தகவல்படி 3.5 என்பது ஆரோக்கியமானது என்ற எல்லைக்குள் வராத பொருட்கள். மொத்தமாக சொன்னால் பலதரப்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த 70% பொருட்கள் ஆரோக்கியமானது என்ற எல்லைக்குள் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.




அமெரிக்க வேலையை உதறி பால் பண்ணையில் ரூ.44 கோடி வருவாய் ஈட்டும் ‛ஐஐடி’ மாணவர்!




இது குறித்து தெரிவித்துள்ள நெஸ்லே, ’’நாங்கள் கடந்த 7 வருடங்களாக சர்க்கரை மற்றும் சோடியம் அளவுகளை நாங்கள் 14-15% வரை குறைத்துள்ளோம்.நாங்கள் ஆரோக்கியமான தயாரிப்புகளை கொடுக்கவே முயற்சி செய்கிறோம்.சமீபத்திய ஆண்டுகளில் குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்குமான பல தயாரிப்புகளை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம்.நல்வாழ்வுக்கும், மகிழ்ச்சிக்கும் இடையேயானது தான் ஆரோக்கியமான உணவு என்பது. எங்களது இலக்கு மாறவில்லை. தெளிவாக இருக்கிறோம். தொடர்ந்து எங்களது தயாரிப்புகளை சுவையாகவும், ஆரோக்கியமானதாகவும் கொடுப்போம் எனக் குறிப்பிட்டுள்ளது.




இது குறித்து தெரிவித்துள்ள நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், ஊட்டச்சத்து ஒரு அடிப்படையான தேவை என்பதை நெஸ்லே இந்தியா நம்புகிறது. ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதில் உணவு தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரும் பங்கு உண்டு. எங்களது தயாரிப்புகளில் ஊட்டச்சத்தை அதிரிக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி  செய்வோம்.புதிய ஊட்டச்சத்தான உணவுபொருட்களை சந்தையில் அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுப்போம் என்றார். 


முன்னதாக, 2015ம் ஆண்டு ஜூன் மாதம் மேகி நூடுல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டது. மேகி நூடுல்ஸில் காரீயம் அதிகம் இருப்பதாக எழுந்த புகாராலும், மோனோ சோடியம் குளுக்கோமேட் என்ற டேஸ்ட் தொடர்பான விவகரங்களை தவறாக தெரிவித்திருப்பதாலும் தடை விதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் பல்வேறு வழக்குகளை சந்தித்த பிறகு தடை நீக்கப்பட்டு மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்நிறுவனமே தங்களது தயாரிப்புகளின் ஆரோக்கியம் குறித்த எதிர்மறை கருத்தை கூறியிருப்பது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக பெற வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!