உங்கள்  எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது எளிமையானது. சரியான உணவு முறை மற்றும் முறையான வாழ்வியல் முறை மாற்றங்கள் என உடலின் இயற்கையான முறையில் நோய்களை எதிர்த்து போராடுவதற்கு தேவையான உடலை தன்னை தானே தயார் படுத்தி கொள்ளும்.



  • இரவு 7 மணி நேரம் ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு தேவையாக உள்ளது. நன்றாக ஆழ்ந்து தூங்குவது உடலின் எதிர்ப்பு மண்டலம் முறையாக செயல்பட உதவியாக இருக்கும். தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக அனைத்து மொபைல், டிவி அணைத்து விட்டு , அறையில் நன்றாக இருட்டாக வை த்து கொண்டு தூங்க செல்வது அவசியம்.




 



  • முழு தாவர உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொள்ளுங்கள் பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள் , விதைகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற முழு தாவர உணவுகளிலும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக உடலை தயார்படுத்தும். இதற்கிடையில், தாவர உணவுகளில் உள்ள நார் சத்து குடல் நுண்ணுயிரிக்கு அல்லது  குடலில் உள்ள ஆரோக்கியமான பாக்டீரியாக்களுக்கு  உணவளிக்கிறது. ஒரு வலுவான குடல் நுண்ணுயிர் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளை உங்கள் செரிமானப் பாதை  வழியாக உங்கள் உடலுக்குள் நுழைவதைத் தடுக்க உதவும்.





  • அதிக புளித்த உணவுகளை உண்ணுங்கள் அல்லது புரோபயாடிக் சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளுங்கள் புளித்த உணவுகளில் புரோபயாடிக்ஸ் எனப்படும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன, அவை உங்கள் செரிமான மண்டலத்தை விரிவுபடுத்துகின்றன.தயிர், மோர், மற்றும் பழைய சோறு நிறைந்த ப்ரோபயாடிக் உணவுகள்.





  • தினம் ஒரு மணி நேரம் மிதமான உடல் பயிற்சியில் ஈடுபடுங்கள்.. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்தும். மேலும் நம்மை புத்துணர்வோடும், ஒவ்வொரு நாளும் சிறப்பாக செயல் ஆற்றவும் இது உதவும். நடை பயிற்சி , யோகா, ஜாகிங், சைக்ளிங், நீச்சல் போன்ற பயிற்சிகள் செய்யலாம்.





  • போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். ஒரு நாளைக்கு 8 டம்பளர் தண்ணீர் குடிக்கவும். இது சுற்றுசூழலுக்கு ஏற்ப மாறுபடும். நல்ல வெயில் காலத்து 3 லிருந்து 4 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதே குளிர் காலத்தில் 2 லிட்டர் தண்ணீர் போதுமானதாக இருக்கும். இது உடல் உறுப்புக்கள் சீராக இயங்க உதவும். நோய் களுக்கு எதிராக செயல்பட உடலை தயார் படுத்தி வைக்கும்.



  • தினம் ஒரு 20 நிமிடம் காலை இளஞ்சூடான வெயிலில் இருப்பது உடலுக்கு தேவையான வைட்டமின் டி வெயில் இருந்து உடலுக்கு கிடைக்கும். சிறந்த வைட்டமின் டி நமக்கு வெயிலில் இருந்து கிடைக்கும்.