எல்.ஐ.சி. ஜீவன் தருண் திட்டம்:
எல்.ஐ.சி. ஜீவன் தருண் திட்டம் (LIC's Jeevan Tarun Policy) மூலம் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. குழந்தை பிறந்து 90 நாட்கள் ஆனவர்கள் முதல் 12 வயது நிரம்பியவர்கள் வரை இத்திட்டத்தில் இணைய தகுதியுடையவர்கள். 25 வயது பூர்த்தியானது பாலிசி முதிர்ச்சியடையும். இதற்கு குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகையாக ரூ.75 ஆயிரம் டெபாசிட் செய்யலாம். அதிகபட்ச உச்ச வரம்பு இல்லை.
இதன் சிறப்பம்சம், குழந்தையின் கல்விச் செலவுக்கான தொகையை பாலிசி திட்டம் தொடங்குவோர் முடிவு செய்யலாம். மேலும், 20 வயது பூர்த்தியடைந்தது முதல் 24 வயது வரை 5, 10 மற்றும் 15 சதவீத அளவில் பாலிசி தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இல்லையெனில், குழந்தையின் 25-வது நிறைவடைந்ததும் முதிர்வு தொகையை மொத்தமாக பெறலாம்.
பாலிசி விவரம்:
குழந்தைக்கு காப்பீடு 8 வயது முதல் அல்லது பாலிசி தொடங்கிய 2 ஆண்டுகளில் தொடங்கும். பாலிசியில் 2 ஆண்டு முடிவிலேயே கடன் பெறும் வசதி உண்டு. செலுத்தப்படும் பிரீமியத்துக்கு வருமான வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
பாலிசி போனஸ் தொகை, குறைந்தபட்ச உறுதித் தொகை, லாயல்ட்டி தொகை உள்ளிட்டவைகள் பாலிசி முதிர்ச்சியடையும்போது உங்களுக்கு கிடைக்கும். இதனால் உங்கள் சேமிப்புத் தொகை அதிகரிக்கும். இந்த பாலிசியில் முதலீடு செய்யும் போது கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 5, 10, 15 சதவீத தொகையை இடையில் பெறவும் முடியும் என்பது பெரும் உதவியாக இருக்கும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு எல்.ஐ.சி முகவர்களை அணுகலாம். எல்.ஐ.சி ஆன்லைன் போர்டல் https://licindia.in/ என்ற தளத்திலும் காணலாம்.
மேலும் வாசிக்க..
B.Ed. Admission: அனைத்து வகைக் கல்லூரிகளிலும் 69% இட ஒதுக்கீடு கட்டாயம்: வழிகாட்டல் வெளியீடு
Bonda Mani Hospitalized: கிட்னி செயலிழப்பால் அவதிப்பட்ட போண்டாமணி... சிகிச்சை செலவை ஏற்ற தமிழக அரசு!