அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கான ஏப்ரல் / மே மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதை மாணவர்கள் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். 


மாணவர்கள் https://aucoe.annauniv.edu/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 


தமிழ்நாட்டிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பல்கலைக் கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக் கழகம். பொறியியல் படிப்பிற்கு முக்கியமான பல்கலைக் கழகங்களில் அண்ணா பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகத்திற்கு கீழ் வரும் கல்லூரிகளில் பல லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளை படித்து வருகின்றனர். 


கொரோனா பெருந்தொற்றுகளால் கடந்த ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தன. நிலைமை ஓரளவுக்குக் கட்டுக்குள் வந்தபிறகு கடந்த சில மாதங்களாகக் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. 


இந்த நிலையில் பொறியியல் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல்/ மே மாதத்தில்  செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. அதற்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. இதை மாணவர்கள் பார்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். 


மாணவர்கள் https://aucoe.annauniv.edu/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 


அதேபோல பிஎச்.டி. படிப்புகளுக்கான 2021 நவம்பர் / டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகளையும் இன்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.





பாடத்திட்ட மாற்றம்


20 ஆண்டுக்குப் பிறகு பொறியியல் மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாறுவதாக அண்ணா பல்கலைக்கழகம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. இந்த பொறியியல் பாடத்திட்ட மாற்றம் நடப்புக் கல்வியாண்டிலேயே  (2022- 23) அமலாகி உள்ளது. இதற்கான புதிய பாடத்திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.


ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். தொழில் நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ற திறன்களை அவர்கள் கொண்டிருக்காததுதான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழில் துறையினரின் தேவைக்கும் மாணவர்களின் திறனுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் வகையில் புதிய பாடத்திட்டம் அமைகிறது. 


தேவைக்கும் தொழில்நுட்பத்துக்கும் ஏற்ப புதிய பொறியியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்துக்கு அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


ALSO READ | TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி


இதையும் வாசிக்கலாம்: TAHDCO Land purchase Scheme: தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம்‌ மானியத்தில் 5 ஏக்கர் வரை நிலம் வாங்கலாம், எப்படி?- முழு விவரம்