உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வரும் நிலையில், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.


வேலைவாய்ப்பின்மை அதிகம்


2023 மார்ச் மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 3 மாதங்களை ஒப்பிடுகையில் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மும்பையில் இயங்கும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையான (சிஎம்ஐஇ) கணித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் வேலைவாய்ப்பின்மை 7.5 சதவீதமாக இருந்த நிலையில், மார்ச் மாதம் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி நகரப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை 8.4 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 7.5 சதவீதமாகவும் உள்ளது.


இது பற்றி வெளியான அறிக்கையில், "இந்தியாவில் தொழிலாளர் சந்தை 2023 மார்ச்சில் சரிவை சந்தித்துள்ளது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிப்ரவரியில் 7.5 சதவீதமாக இருந்தது. ஆனால் மார்ச்சில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும், தொழிலாளர் சந்தை நிலைகளின் பங்களிப்பும் 39.9 சதவீதத்தில் இருந்து 39.8 சதவீதமாக குறைந்துள்ளது. அதே போன்று நடப்பாண்டில் வேலைவாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கையும் 409.0 மில்லியனில் இருந்து 407.6 மில்லியனாக குறைந்துள்ளது.


தமிழ்நாட்டின் நிலை?


அதிகபட்சமாக ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் தலா 26.8 சதவீதமாகவும், குறைந்தபட்சம் சத்தீஸ்கரில் 0.8 சதவீதமாகவும், புதுச்சேரியில் 1.5 சதவீதமாகவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் உள்ளது.


மாநில வாரியாக பார்க்கையில், ஹரியானாவில் அதிகபட்சமாக 26.8 சதவீதம் வேலைவாய்ப்பின்மை இருக்கிறது. இதற்கு அடுத்து, ராஜஸ்தானில் 26.4%, பீகாரில் 17.6%, ஜார்க்கண்ட 17.5%, ஒடிசா 2.6%, சிக்கிம் 20.7%, ஜம்மு காஷ்மீர் 23.1%.  பீகார் 17.6%, குஜராத் 15.9%, ஹிமாச்சல் பிரதேசம் 11.7%, உத்தர பிரதேசம் 5.5%, தெலங்கானா 5.2%, தமிழ்நாடு 3.4%, டெல்லி 9.7% வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது.


உத்தரகாண்ட், புதுச்சேரி, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை குறைவாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல நிறுவனங்கள் பணிநீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வந்தது. உலகளவில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் பலரும் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வந்தனர். கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய பணிநீக்கங்கள் தற்போது வரை நடந்து வருகிறது. இந்த நடவடிக்கையால் கூட நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க காரணம் என்று கூறப்படுகிறது. 


இந்நிலையில், இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து இருப்பதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதில் உத்தரகாண்ட், புதுச்சேரி, குஜராத், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க


IIM Sambalpur: அம்மாடியோவ்... 64 லட்சம் ஆண்டு ஊதியம் - ஐஐஎம் மாணவி அசத்தல்


ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு வலு சேர்த்துள்ளது...காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்...!


Chattisgarh Muria Tribe: திருப்திதான் முக்கியம்; எத்தனை பேருடன் வேண்டுமானாலும்: இப்படியும் ஒரு ஜோடி தேர்வா?