திருமணத்திற்கு முன்பாக பல்வேறு நபர்களுடன் உடலுறவை வைத்துக்கொள்ள அனுமதிப்பதை, வழக்கமாக கொண்டுள்ள சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த முரியா சமூக மக்களின் பழக்கவழக்கம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்திற்கு பிறகு உடலுறவு தொடர்பாக தம்பதிக்கு இடையே பிரச்சினை வருவதை தவிர்க்க, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


இந்திய கலாச்சாரம்


மேற்கத்திய நாடுகளில் டேட்டிங், லிவிங் டு கெதர் எல்லாம் பெற்றோர் சம்மதத்துடனேயே சர்வசாதாரணமாக நடக்க, நம்ம ஊரிலோ காதல் என்றாலே கவுரவ கொலை செய்வது எல்லாம் இன்று தொடர்ந்து வருகிறது. இதனால், டேட்டிங் மற்றும் லிங் டு கெதர் என்பது எல்லாம் அவ்வளவு எளிதான காரியம் அல்ல என நினைக்கிறோம். ஆனால், இந்தியாவில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள், திருமணத்திற்கு முன்பாக கட்டாயம் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதை நடைமுறையாக பின்பற்றி வருகின்றனர்.


முரியா சமூக மக்கள்:


சத்தீஸ்கரில் உள்ள பழங்குடி இனமான முரியா சமூக மக்கள் தான், உடலுறவு  பற்றி இந்தியாவிலேயே மிகவும் மாறுபட்ட அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். அதன்படி, கோட்டூல் எனும் பெயரிலான ஒருவார திருவிழாவை கொண்டாடி வருகின்றனர்.  அந்த சமூகத்தை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் பாலுணர்வு பற்றி தெரிந்துகொள்ள உதவும் வகையில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.


கோட்டூல் என்றால் என்ன?


நகரங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளில் இருக்கும் விடுதிகளை போன்று, மூங்கில் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட சுவர்கள் மற்றும் ஓலைகளால் ஆன கூரை அமைக்கப்படுகிறது. இதன் பெயர் தான் கோட்டூல். இதில் தான் ஆணும், பெண்ணும் தனக்கான ஜோடியை தேர்ந்து எடுத்துக்கொள்வதற்கான நடைமுறை பின்பற்றப்படுகிறது. 18 வயது நிரம்பிய பெண் மற்றும் 21 வயது நிரம்பிய ஆண் மட்டுமே இந்த சடங்கில் அனுமதிக்கப்படுகின்றனர். 


திருவிழாவின் விதிகள்:


சம்பந்தபட்ட திருவிழா நாளில் திருமணமாகாத வயது வந்த ஆண், பெண்கள் ஒன்று கூடி ஆடி, பாடிக் கொண்டாடுகின்றனர். மது அருந்திவிட்டு இசை வாத்தியங்களை வாசிக்கின்றனர். பிறகு இரவு வந்ததும் பெரியவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற, திருமணமாகாத இளைஞர்கள் அந்த மூங்கில் குடிலுக்குள் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் சென்று, பேசி பழகி பாலியல் உறவை வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை அவர்களுக்கு ஒத்துவராவிட்டால்,   தனக்கான ஜோடியாக வேறு நபரை தேர்வு செய்தும் அவர்கள் உடலுறவு கொள்ளலாம். ஒரு ஆணும், பெண்ணும் தனக்கான சரியான ஜோடியை தேர்ந்து எடுப்பதற்காக, எத்தனை பேருடனும் உடலுறவு கொள்ளலாம்.  இறுதியில் இருவரது மனங்களும் ஒத்துப்போனால், பெண்ணின் அனுமதியுடன் அவரது தலையில் பூவை வைத்து  பையன் தனது விருப்பத்தை வெளிப்படுத்தலாம். அதன்பிறகு அந்த சமூகத்தின் பாரம்பரிய முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்படும். தங்களது துணையின் பாலியல் இச்சைகள் தொடர்பாக முழுமையாக அறிந்துகொண்டு திருமணம் செய்துகொள்வதால், முரியா சமூகத்தில் பாலியல் தொடர்பான குற்றங்களே நடைபெறுவதில்லை என கூறப்படுகிறது.