இந்தியாவில், வருமான வரி தாக்கல் செய்தோருக்கு வருமான வரி துறை திரும்பி செலுத்த வேண்டிய தொகை கிடைப்பதற்கு சில நேரங்களில் தாமதம் ஆகலாம். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.


வருமான வரி ரீஃபண்டின் நிலையை எப்படி தெரிந்துகொள்வது:


உங்கள் வருமான வரிக் கணக்கை நீங்கள் தாக்கல் செய்தவுடன், வருமான வரி துறை  நிதியாண்டில் நீங்கள் கூடுதலாக வரி செலுத்தி இருந்தால் பணத்தைத் திரும்ப கொடுக்கிறது.


பொதுவாக, வருமான வரி திரும்பப்பெறுதல் சில வாரங்களுக்குள் மதிப்பீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். சில நேரங்களில், மாதங்கள் கூட ஆகலாம்.


எனவே, உங்கள் வருமான வரியைத்(Income Tax) தாக்கல் செய்த பிறகு, இரண்டு வாரங்களுக்குப் பிறகு பணத்தைத் திரும்பப்பெறும் நிலையை நீங்கள் கண்காணிக்க வேண்டும். உங்கள் வருவான வரி ரீஃபண்ட்(Income Tax Refund) நிலையைச் சரிபார்க்க, www.incometaxindia.gov.in   அல்லது www.tin-nsdl.com  என்ற இணையத்தளத்தில் ’வரித் திரும்பப்பெறுதலின் நிலை’ (Status of Tax Refunds) என்பதை கிளிக் செய்து, உங்கள் PAN மற்றும் உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதல் நிலுவையில் உள்ள மதிப்பீட்டு ஆண்டை (assessment year-AY) உள்ளிடவும்.



  1. தாமதமான தாக்கல்:


நீங்கள் உரிய நேரத்தில் உங்களுடைய ஐ.டி. ரீஃபண்ட் தொகை வந்து சேர வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முதலில் உரிய நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். பின்னர், அவர்கள் அளிக்கும் கால அவகாசத்திற்குள் தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.



  1. தரவுகள் தவறாக இருக்கக் கூடாது:


வருமான வரி அதிகாரிகளிடம்  அளிக்கும் தகவல்கள் உண்மையானதாக இருத்தல் அவசியம்.  சிலர், அவர்களின் ஆதார் கார்டில் தொடங்கி, அடிப்படை ஆவணங்கள் என அனைத்து தரவுகளின் விவரங்களையும் சரியான நேரத்தில் பதிவு செய்யாமல் இருப்பது மிகவும் தவறானது ஆகும். நீங்கள் அளிக்கும் ஆவணங்கள் உள்ள தகவல்கள் உண்மையாக இருக்க வேண்டும். ஆதார் கார்டு மற்றும் பான் கார்டுகளில் மாறுபட்ட வகையில் தகவல் இருக்கக் கூடாது.



  1. Tonnage Tax System (TTS) சரியில்லாமல் இருப்பது:


ஃபார்ம் 16-ல் பூர்த்தி செய்யும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்க வேண்டும். குறிப்பாக, உங்களின் பி.எஃப். தொகை பிடித்தம்,அதன் கணக்கு எண் ஆகியவற்றை முறையாக வழங்க வேண்டும்.



  1. நேரடி சோதனையின்போது கவனம்:


வருமான வரி துறைக்கு கொடுக்கப்பட்ட தகவல் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு நேரடியாக வந்து தகவல்களை உறுதி செய்வார்கள். அந்த சமயத்தில் உங்களின் அலட்சியம், அல்லது தவறான முகவரி என்று தெரிந்தால், உங்களில் அப்ளிக்கேஷன் கேன்சல் ஆக அதிக வாய்ப்பு இருக்கிறது.


மேலும், வங்கி கணக்கு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைக்கப்படாமல் இருப்பது, தவறனா தொடர்பு எண்கள், முகவரி, ஈ.மெயில் முகவரி ஆகியவை தவறாக இருப்பினும் உங்கள் வருமான வரி ரீஃபண்ட் கிடைப்பதில் தாமதமாகும்.


நிர்மலா குறித்த பதிவால் காங்கிரஸ் சங்கடம்? திடீரென ராகுல் சந்திப்பை பதிவிட்ட நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!


PMK : தமிழ்நாட்டுக்கு 60 மாவட்டம்.. வன்னியர்கள் இட ஒதுக்கீடு.. பா.ம.க. பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு