பிரபல இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தயாரிப்பில், பிக் பாஸ் தமிழ் சீசன் 3 புகழ் தர்ஷன்-லாஸ்லியாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூகுள் குட்டப்பா. கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களான, சபரி மற்றும் சரவணன் ஆகியோரின் இயக்கத்தில், உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், பிக்பாஸ் புகழ் தர்ஷன், மனோபாலா மற்றும் லாஸ்லியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்


கே.எஸ்.ரவிக்குமார் சொந்த தயாரிப்பில் நிறுவனமான  RK செல்லுலாய்ட் நிறுவனம் தயாரிக்க, கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த படம் மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் ரீமேக் ஆகும். படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி கேஎஸ் ரவிக்குமார் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. 




அதில் பேசிய இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், இந்தப் படத்துக்காக நான் 20 வருடங்களுக்கு பிறகு தயாரிப்பில் களம் இறங்கியுள்ளேன்.  என்னுடைய அசிஸ்டெண்ட் இருவர் என்னிடம் கோரிக்கை வைத்ததால் அவருக்கு உதவி செய்யும் விதமாக இந்த படத்தில் நடித்து தயாரித்துள்ளேன்.  இதனைத் தொடர்ந்து மற்றொரு படத்தையும் நான் தயாரிக்கவுள்ளேன். அதில் , இயக்குநர் விக்ரமன் மகன் கனிஷ்கா நாயகனாக அறிமுகமாகவுள்ளார், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றார்.


முன்னதாக படத்தின் கதாநாயகன் தர்ஷன் தன்னடக்கத்துடன் பேசினார். அவர் பேசுகையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் வேலை செய்த அனுபவத்தை பற்றி நெகிழ்ந்து பேசினார்.


ஒரு ஷாட்டில் இவருக்கு வராத ஒரு விஷயத்தை இப்படி செய் என்று அவரே இறங்கி வந்து முட்டி போட்டு நடித்து காண்பித்து அதே போல செய்யவைத்த அனுபவங்கள் அவ்வளவு எளிதாக வேறு யாருக்கும் கிடைத்துவிடாது, அந்த வகையில் நாங்கள் பாக்கியம் செய்துள்ளோம் என்று கூறினார். யோகி பாபு பற்றி கூறுகையில், அவருக்கு ஸ்ரீ லங்காவில் நிறைய ஃபேன்ஸ் இருப்பதாகவும், தர்ஷனின் நண்பர்கள் தினமும் அவரை பற்றி கேட்பார்கள் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி, செட்டில் கே.எஸ்.ரவிக்குமார் சாரும் யோகி பாபுவும் இணைந்து விட்டால் ரணகளமாக இருக்கும் என்றும் கூறினார். கே.எஸ். ரவிகுமாரிடம் ரஜினி, கமல் உடனெல்லாம் பணிபுரிந்த அனுபவங்களை பற்றி நிறைய பேசுவோம், செட்டிற்கு போனாலே எப்போது அவரது அனுபவங்களை பேசுவார் என்று காத்திருப்போம் என்றார்.




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்