சென்னையில் நடைபெற்ற விழாவில் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். ஈழத்தமிழர்களுக்கு  இரட்டைக்குடியுரிமை, சென்னையில் அனைவருக்கும், பிற பகுதிகளில் பெண்களுக்கும் இலவச பேருந்து பயணம், அரசு பள்ளிகளில் காலை உணவுத்திட்டம், மாநிலக் கல்விக் கொள்கைக்கு வல்லுநர் குழு அமைத்தல், தமிழ்நாடு 60 மாவட்டங்களாக பிரிக்கப்படுதல், வறுமை ஒழிப்பு, இளைஞர் நலன், கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.5000 கோடி மறுமுதலீடு, ஒரு லட்சம் கோடியில் நீர்ப்பாசனத் திட்டம், இரண்டு புதிய அமைச்சங்கள், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், வன்னியர்கள் இட ஒதுக்கீடு, பிற சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கிடு போன்ற தலைப்புகளில் அறிக்கை வெளியிடப்பட்டது.