பஞ்சாப் மாநிலத்திற்கு கடந்த மாதம் 20-ந் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 10-ந் தேதி வெளியானது. இதில், மொத்தமுள்ள 117 இடங்களில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி ஆட்சிமையத்துள்ளது. பஞ்சாப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த முறை கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டமன்றம் அமைந்துள்ளது.


பஞ்சாப் சட்டமன்றத்திற்கு தேர்வாகியுள்ள எம்.எல்.ஏ.க்களில் 75 சதவீதம் நபர்கள் கோடீஸ்வரர்கள் ஆவர். அந்த மநில சட்டசபையின் புதிய எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் ஒரு பங்கினர் சொத்து மதிப்பு ரூபாய் 5 கோடிக்கும் அதிகமாகும்.




இதுமட்டுமின்றி, கடந்த 2017ம் ஆண்டு பஞ்சாப் சட்டசபைக்கு தேர்வான எம்.எல்.ஏ.க்களுடன் ஒப்பிடும்போது, இந்த தேர்தல் மூலம் பஞ்சாப் சட்டசபைக்கு தேர்வான எம்.எல்.ஏ.க்கள் மீது மூன்று மடங்கு அதிகளவில் குற்றப்பின்னணி உள்ளது.


இந்த முறை தேர்வாகியுள்ள 117 எம்.எல்.ஏ.க்களில் 33.33 சதவீதம் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூபாய் 5 கோடிக்கும் அதிகமான அளவு சொத்து உள்ளது. 23.08 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 5 கோடி வரையிலான சொத்து உள்ளது. 27.35 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு ரூபாய் 50 லட்சம் முதல் ரூபாய் 2 கோடி வரை சொத்து உள்ளது. 11.97 சதவீத எம்.எல்.ஏக்களுககு ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 50 லட்சம் வரை சொத்து உள்ளது. 4.27 சதவீத எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான சொத்துக்கள் உள்ளது.


ஆட்சியைப் பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் 92 எம்.எல்.ஏ.க்களில் 63 பேர் கோடீஸ்வரர்கள். காங்கிரஸ் கட்சி சார்பாக வெற்றி பெற்ற 18 எம்.எல்.ஏ.க்களில் 17 பேர் கோடீஸ்வரர்கள். சிரோமணி அகாலி தளம் சார்பாக வெற்றி பெற்ற 3 பேரும் கோடீஸ்வரர்கள். பா.ஜ.க. சார்பில் வெற்றி பெற்ற 2 எம்.எல்.ஏ.க்கள், பி.எஸ்.பி. சார்பாக வெற்றி பெற்ற ஒருவர், மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ. ஒருவரும் கோடீஸ்வரர்கள் ஆவார்.




இந்தாண்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 10.45 கோடி ஆகும். ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 7.52 கோடி ஆகும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 22.73 கோடி ஆகும். கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.


பஞ்சாப் எம்.எல்.ஏ.க்களிலே மிகப்பெரிய பணக்காரராக மொகாலி எம்.எல்.ஏ. குல்வந்த் சிங் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூபாய் 238 கோடி ஆகும். அவரைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராணா குர்ஜித்சிங் உள்ளார். அதிக சொத்து உள்ள எம்.எல்.ஏ.க்களில் முதல் 5 இடங்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும், அதற்கடுத்த 4 இடங்களில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களும், அடுத்த இடுத்தில் சுயேட்சை எம்.எல்.ஏ.வும் உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண