வருமானத்தின் ஒரு பகுதியை வங்கியில் சேமிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இருக்கும். மேலும், இப்போதெல்லாம்  எல்லால் வங்கி பரிவர்த்தனைகளாக மாற்றப்பட்டுள்ளது. பல வங்கிகள் சேமிப்புக் கணக்கைத் தொடங்க பல இலாபகரமான திட்டங்களை வழங்குகின்றன. பொதுத்துறைகள் வங்கிகள் என்றில்லாமல், தனியார் வங்களின் எண்ணிக்கை ஏராளம். அவை வழங்கும் சேவைகள் மற்றும் வசதிகள் மாறுபடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருப்பது நல்லது என்று தோன்றினாலும், நீங்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். நிறைய வங்கிக் கணக்குகள் வைத்திருந்தாலும், நீங்கள் சிலவற்றை கவனமாக கையாள வேண்டும். 


குறைந்தபட்ச வங்கி இருப்பு தொகை:


உங்கள் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்கப்பட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வங்கிகள் இந்த குறைந்தபட்ச இருப்புத் தொகையைத் தீர்மானிக்கின்றன. சேவை மற்றும் கணக்கைப் பராமரிப்பதற்கான செலவைக் கருத்தில் கொண்டு, குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதபோது அதற்கென குறிப்பிட்ட கட்டணத்தையும் அபராதமாக வசூலிக்கின்றன. 


இப்போது, ​​ஒன்று அல்லது இரண்டு சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பை வைத்திருப்பது உங்களுக்கு சரி என்றால், நீங்கள் தராளமாக ஒன்றிற்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்திருப்பதில் சிக்கல் இல்லை. ஆனால், சிலருக்கு நிறைய வங்கிக் கணக்குகளில் குறைந்தப்பட்ச இருப்புத் தொகையை மெயிண்டெயென் செய்வது சவாலானதாக இருக்கும்.


பணம் எடுக்க அதிகபட்ச வரம்பு:


சில சேமிப்புக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட டெபிட் கார்டுகள், பணம் எடுக்க அதிகபட்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், பல கணக்குகள் இருப்பது உதவியாக இருக்கும். வெவ்வேறு கணக்குகளில் இருந்து பெரிய தொகையை எடுக்கலாம்.



ஆம், நீங்கள் பல சேமிப்புக் கணக்குகள் வைத்திருக்கலாம் என்பதற்கு வரம்பு இல்லை. ஆனால், சிறிது நேரம் உங்கள் கணக்கில் எந்தச் செயலையும் வங்கி கண்டறியவில்லை என்றால், அது செயலற்றதாக மாற்றப்படும்.


கூடுதலாக, கணக்கை செயலற்ற நிலையில் வைத்திருப்பதாலும் நீங்கள் பல்வேறு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.  இது இறுதியில் வங்கி இருப்பு குறைவதற்கு வழிவகுக்கும்.


வங்கிக் கட்டணங்கள்:


வங்கிகள் பல சேவைகளை இலவசமாக வழங்குகின்றன. ஆனால் சிலவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வாடிக்கையாளராக, வங்கி எந்தந்த சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கின்றன என்பது குறித்து நன்றி அறிந்திருக்க வேண்டும்.


பெரும்பாலும், வாடிக்கையாளர்கள் பல கட்டணங்களைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு வங்கியில் கணக்கைத் தொடங்கும் போது அல்லது அவர்களின் சேவைகளை பயன்படுத்தும்போது அனைத்து தகவல்களையும் நீங்கள் சேகரிக்க வேண்டும்.


ஒன்றிற்கும் மேல் வங்கி கணக்குகளை வைத்திருப்பது, இல்லாமல் இருப்பதும் அவரவரின் தனிப்பட்ட தேவைகள மற்றும் அதை நிர்வகிப்பதை பொறுத்தது.




மேலும் வாசிக்க..


India Womens Asia Cup Squad: ஆசிய கோப்பைக்கு அதிரடியாக அறிவிக்கப்பட்ட இந்திய அணி.. கவுர் தலைமையில் களம் காணும் 15 பேர் குழு!


Sept 23 OTT release movies: இந்த வாரம் ஓடிடி வாரம்... ஓடிடி நேயர்களுக்கான குட் நியூஸ் இதோ!


Ajith : சக பைக்கிங் பார்ட்னருக்கு அஜித் செய்த உதவி.. வாவ் சொல்லும் ரசிகர்கள்..