செப்டம்பர் 23 ஆம் நாளான இந்த வார வெள்ளிக்கிழமை அன்று தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழித் திரைப்படங்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. அந்த திரைப்படங்கள் மற்றும் அவை எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகின்றன என்பதைக் காணலாம்.






அருள்நிதி நடிப்பில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் திரையரங்குகளில் வெளிவந்த தமிழ் திரைப்படமான டைரி மற்றும் தனிகெல்லா பரணி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் லக்ஷ்மி நாராயணா மற்றும் வம்சிதர் இயக்கத்தில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஆஹா தளத்தில் வெளியாக உள்ளது. 






தனுஷ் நடிப்பில் இயக்குநர் ஜவஹர் இயக்கத்தில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளிவந்த தமிழ் திரைப்படமான திருச்சிற்றம்பலம் சன் நெக்ஸ்ட்டில் வெளியாக உள்ளது. அமெரிக்க ஆக்ஷன் த்ரில்லர் படமான லோ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் அல்லி சன் ஜானே, ஜுர்னி ஸ்மோலெட் நடித்துள்ளனர். அன்னா ஃபோர்ஸ்டர் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் ரோமன் கவ்ரஸ் இயக்கத்தில் வெளிவந்த பிரஞ்சு திரைப்படமான எத்தனா திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது. 






மதூர் பந்தர்கர் இயக்கத்தில் தமன்னா, அபிஷேக் பஜாஜ் நடித்துள்ள ஹிந்தி மொழி திரைப்படம் பப்ளி பவுன்சர். இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது. பெக்காவின்  ஹஸ் ஹஸ் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ஹஸ் ஹஸ் சீரீஸ் அமேசான் பிரைமிலும், சல்லே புண்ணியம் ஆல்பம் சோனி லைவிலும் வெளியாக உள்ளது. 






இந்த வாரம் ஓடிடி நேயர்களுக்கு மிக பிஸியான வாரமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.