இன்றைய இளைஞர்களுக்கு கூட பரிச்சையமான ஒரு நடிகர் ராமராஜன். அவ்வளவு எளிதாக யாராலும் அவரை மறந்து விட முடியுமா என்ன? கலர் கலர் சட்டை, லிப்ஸ்டிக், கிராமியம், டிரௌசர் இப்படி எத்தனை  அடையாளங்களை கொண்டவர். அவருக்கென ஒரு தனி ஸ்டைல் நிச்சயமாக உண்டு அதை யாராலும் ஈடு செய்ய முடியாது. 


 


இன்றும் நிலைக்கும் அடையாளம்:


தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து முன்னணியில் இருந்த நடிகர் ராமராஜனின் திரை வாழ்வில் இன்றும் அடையாளமாக இருப்பது "கரகாட்டக்காரன் " திரைப்படம். இந்த கிராமத்து கதாநாயகனின் பாடல்கள் இன்றும் சூப்பர் ஹிட் பாடல்கள் தான். 


 



 


பலே கூட்டணி:


கங்கை அமரன் இயக்கிய "கரகாட்டக்காரன்" திரைப்படம் சூப் டூப்பர் ஹிட் திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து இந்த வெற்றி கூட்டணியில் அமைந்த செண்பகமே செண்பகமே, வில்லுப்பாட்டுக்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், பொண்ணுக்கேத்த புருஷன் மற்றும் பல படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. இவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல ஒரு புரிதல் இருந்தது தான் அதற்கு முக்கியமான காரணம். 


 


மீண்டும் ரீ என்ட்ரி:


ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் ராமராஜன் தற்போது "சாமானியன்" எனும் திரைப்படம் மூலம் மீண்டும் ஹரோவாக ரீ என்ட்ரி கொடுக்கிறார். பல கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் வந்த போதும் திரும்பவும் நடித்தால் கதாநாயகனாக தான் நடிப்பேன் என வந்த அனைத்து வாய்ப்புகளையும் நிராகரித்து வந்துள்ளார். எட்சட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் வி. மதியழகன் தயாரிப்பில் ஆர். ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார். 5 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் நடிகர் ராதாரவி மற்றும் எம்.எஸ். பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 


வயதிற்கு ஏற்ற கதாபாத்திரம்:


நடிகர் ராமராஜனின் திரைவாழ்வில் மிகவும் முக்கிய பங்கு வகித்த கங்கை அமரனிடம் ராமராஜனின் ரீ என்ட்ரி குறித்து கேட்டபோது அவர் மிகவும் மகிழ்ச்சியோடு ராமராஜனை வாழ்த்தினர். ஆனால் அவர் வயதிற்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடிப்பது நல்லது என்றார். இருப்பினும்  இத்தனை ஆண்டுகள் இடைவேளைக்கு பிறகு மீண்டும் அவர் ரீ என்ட்ரி கொடுப்பதில் சந்தோஷம். நாங்கள் இருவரும் இன்றும் தொலைபேசி மூலம் தொடர்பில் தான் இருக்கிறோம். மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 


ட்ராப் ஆன கரகாட்டக்காரன் 2 :


மேலும் அவர் கூறுகையில் கரகாட்டக்காரன் 2 படத்திற்கான கதையை உருவாக்கினோம். அதில் கீர்த்தி சுரேஷ், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிகர் ராமராஜனோடு நடிப்பது போல கதை அமைத்து இருந்தோம். கீர்த்தி சுரேஷ் அப்பாவாக ராமராஜன் நடிப்பது போல கதை இருந்தது. ஆனால் ராமராஜன் நடித்தால் ஹீரோவாக தான்  நடிப்பேன் என்று கூறியதால் அந்த கதையை அப்படியே டிராப் செய்து விட்டோம் என்றார் கங்கை அமரன்.



ஏதோ இருக்கு :


ஒரு நடிகராக ராமராஜன் மிகவும் திறமையானவர். அவரின் நடிப்பு மிகவும்  யதார்த்தமாக இருக்கும். திரைக்குப் பின்னும் அவர் ஒரு நல்ல மனிதர், அன்பானவர். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார் என்றால் நிச்சயம் அது அவருக்கு தகுந்த ஒரு படமாக தான் இருக்கும். அவரின் ரசிகர்களை போல் நானும் "சாமானியன்" திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என்றார் கங்கை அமரன்.