Watch Video : வெறிகொண்டு செண்டை மேளம் வாசித்த சியான்.. விக்ரம் செய்த காரியம் இதுதான்

ChiyaanVikram Watch Video : பொன்னியின் செல்வன் பட ப்ரொமோட்ஷனையொட்டி, கேரளாவில் நடந்த சூப்பர் சம்பவம்!

Continues below advertisement

பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ப்ரொமோஷனுக்காக திருவனந்தபுரத்தை அடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு செல்லவுள்ளனர்.

Continues below advertisement

திருவனந்தபுரத்தில் நடந்த ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் செண்டை மேளம் வாசிக்கும் வீடியோவை லைகா தயாரிப்பு நிறுவனம் ஷேர் செய்துள்ளது. அதுபோக, ஆதித்த கரிகாலன் போர் புரியும் காட்சிகளையும் பகிர்ந்தது.

 

ஆதித்த கரிகாலானாக உருமாறிய, விக்ரமின் வீடியோவை வியந்த நடிகர் பிரசன்னா, “ நடிகர் ஆக வேண்டும் என்று கனவு கண்ட நாள் முதல்போர் வீரன் கதாப்பாத்திரத்தில் நடித்து குதிரையில் சவாரி செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த வீடியோவில் என்னை நான் பார்ப்பது போல் உள்ளது. ஒருநாள் என் கனவு நிஜமாகும். நடிகர் விக்ரம் இந்த படத்தில் வெறித்தனமாக நடித்துள்ளார்.”என்று அவரின் கருத்துக்களுடன் ட்வீட் செய்துள்ளார்.

உடனக்குடன் அப்டேட் தரும் லைகா நிறுவனத்தால் சினிமா ரசிகர்களும், பொன்னியின் செல்வன் நாவல் ரசிகர்களும் ஜாலியாக அந்த வீடியோக்களை ரசித்து பகிர்ந்து வருகின்றனர். நடிகர் விக்ரம் தொடர்பான பல வீடியோக்களும் போட்டோக்களும் சியான் விக்ரம் என்ற ஹேஷ்டாகில் பகிரப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக, விமானத்தில் எடுத்த புகைப்படங்களும், கேரள விமான நிலையத்தில் எடுத்த எண்ட்ரி வீடியோவும் பகிரப்பட்டது.

முன்னதாக, "சரி. தஞ்சைக்கு வருகிறேன். எட்டு திக்கும் புலிக்கொடி நாட்டும் திரைப்பயணம் தொடங்கும் முன் பெருவுடையாரின் ஆசி வேண்டுமல்லவா?குந்தவை, உடன் வருகிறாயா? வந்தியத்தேவன் வருவான்.என்ன நண்பா,வருவாய் தானே?அப்படியே அந்த அருண்மொழியையும் இழுத்து வா!" என ட்வீட் செய்ய, ”இளவரசே உங்களுக்காக தஞ்சை முதல் லங்கை வரை சென்ற களைப்பே இன்னும் போகவில்லை. As I am suffering from fever I want work from home. வீடியோ காலில் இளவரசியிடம் பேசி sorry சொல்லி விடுகிறேன். Pls excuse me.” என பதிலளித்தார். இதுபோன்ற இவர்களின் ட்வீட்களால் மக்கள் ஆர்வம் அடைந்தனர் ஆனால், அப்படக்குழுவினர் சோழ தேசத்திற்கு செல்லாமல் ட்ரால் செய்யப்பட்டதுதான் மிச்சம்!

Continues below advertisement
Sponsored Links by Taboola