அக்டோபர் 1-ந் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டித்தொடர் வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. வங்காளதேசத்தில் உள்ள சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளது.
இந்தநிலையில், இந்த ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய மகளிர் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குகிறார். மேலும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் அணி விவரம்:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), தீப்தி ஷர்மா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேகனா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, தயாளன் ஹேமலதா, மேகனா சிங், ரேணுகா சிங், ரேணுகா வஸ்த்ரகர், ராஜேஸ்வரி கயக்வாட், ராதா யாதவ், கே.பி. நவ்கிரே
காத்திருப்பு வீரர்கள்: தனியா சப்னா பாட்டியா, சிம்ரன் தில் பகதூர்.
இந்திய அணியின் பூஜா வஸ்த்ரகர், ரேணுகா தாக்கூர், மேகனா சிங் ஆகியோர் வேகப்பந்து வீச்சில் அசத்த இருக்கின்றனர். அதேபோல், ராதா யாதவ், சினே ரஹா மற்றும் ராஜேஸ்வரி கயக்வாட் ஆகியோர் சுழற்பந்தில் எதிரணியை தவிக்கவிட இருக்கின்றனர்.
இலங்கைக்கு எதிரான முதல் நாள் ஆட்டத்தில் அக்டோபர் 1 ம் தேதி இந்தியா களமிறங்குகிறது. இந்தியா அடுத்து மலேசியா (அக்டோபர் 3) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (அக்டோபர் 4) ஆகிய அணிகளுடன் அடுத்தடுத்த நாட்களில் விளையாடுகிறது. அதேபோல், அக்டோபர் 7 ஆம் தேதி இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய அணிகள் குரூப்-ஸ்டேஜில் ஒரு முறையாவது விளையாடும். ரவுண்ட் ராபின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
முழு அட்டவணை விவரம்:
- அக்டோபர் 1-ந் தேதி முதல் போட்டியில் வங்காளதேசமும், தாய்லாந்து அணிகளும் மோதுகின்றன. அதே தினத்தில் இந்தியாவும், இலங்கையும் மற்றொரு போட்டியில் ஆடுகின்றன.
- அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான்- மலேசியா அணிகள், இலங்கை – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 3-ந் தேதி நடைபெறும் போட்டியில் பாகிஸ்தான் – வங்காளதேசம், இந்தியா – மலேசியா அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 4-ந் தேதி நடைபெறும் போட்டியில் இலங்கை – தாய்லாந்து, இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 5-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகம் – மலேசியா அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 6-ந் தேதி பாகிஸ்தான் – தாய்லாந்து, வங்காளதேசம் – மலேசியா ஆகிய அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 7-ந் தேதி தாய்லாந்து – ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 8-ந் தேதி இலங்கை – மலேசியா, இந்தியா – வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 9-ந் தேதி தாய்லாந்து – மலேசியா, பாகிஸ்தான் – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 10-ந் தேதி இலங்கை – வங்காளதேசம், இந்தியா – தாய்லாந்து அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 11-ந் தேதி வங்காளதேசம் – ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதுகின்றன.
- அக்டோபர் 13-ந் தேதி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணியும், புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள அணியும் அரையிறுதியில் மோதுகின்றன.
- அக்டோபர் 13-ந் தேதி இரண்டாவது அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள அணியும், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள அணியும் மோதுகின்றன.
- அக்டோபர் 15-ந் தேதி இறுதிப்போட்டி மதியம் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.