இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல். டெக் நிறுவனம் உள்ளது. இந்திய வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக ஹெச்.சி.எல். அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளை மூலமாக சில பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு அளித்து வருகிறது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்:
இந்த நிலையில், உலகளவில் டூல்ஸ் மற்றும் வெளிப்புற பவர்டு சாதனங்களில் உலகளவில் தலைமை வகிக்கும் ஸ்டான்லி ப்ளாக் அண்டு டெக்கருடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை – ஹெச்.சி.எல். அறக்கட்டளை கையெழுத்திட்டிருக்கிறது,
ஸ்டான்லி ப்ளாக் அண்டு டெக்கர், அரசாங்கம்-நடத்தும் இரண்டு தொழில் துறை பயிற்சி நிறுவனங்கள் (ஐ.டி.ஐ. நிறுவனங்கள்), புனேவில் உள்ள ஐ.டி.ஐ. மொர்வாடி மற்றும் சென்னை கிண்டியில் ஐ.டி.ஐ. பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஹெச்.சி.எல். அறக்கட்டளையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தால் பயிற்சியை வழங்கும்.
1000 இளைஞர்கள் பலன்:
இதன்மூலமாக ஆண்டுதோறும் 1,000 இளைஞர்கள் பலன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் ஐ.டி.ஐ. பயிற்சி அளிப்பவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சி வழங்கப்படுவது உறுதி செய்யப்படும். இது சமீபத்தில் சந்தை நிலவரத்திற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள உதவும் என்று நம்பப்படுகிறது. மேலும், தொழில்நுட்ப விருந்தினர் விரிவுரைகள், வேலைக்கான சந்தைகள் மற்றும் மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.
இதன்மூலம் இளைஞர்கள் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க: Honda H’ness CB350: ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் CB350 லெகசி எடிஷன் அறிமுகம் - புதிய அம்சங்கள் என்ன?
மேலும் படிக்க: Kawasaki Ninja 7: ஹைப்ரிட் நின்ஜா 7 மின்சார மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்த கவாசகி - இப்படி ஒரு வசதியா?