Honda H’ness CB350: ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் CB350 லெகசி எடிஷன் அறிமுகம் - புதிய அம்சங்கள் என்ன?

Honda H’ness CB350: ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் CB350 லெகசி எடிஷன் மோட்டார்சைக்கிள். இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

Honda H’ness CB350: ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் CB350 லெகசி எடிஷன் மோட்டார்சைக்கிள் விலை, இந்திய சந்தையில் 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

ஹோண்டா ஹைனெஸ் மாடல்:

ஹோண்டா நிறுவனத்தின் ஹைனெஸ் CB350 நியோ ரெட்ரோ வாகனத்தின் லெகசி எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களில் இருந்து தோற்றத்தில் முழுமையாக மாறுபட்டுள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த மாடல் வாகனத்தின்  ஸ்டேண்டர்ட் வேரியண்ட்களில் மிகவும் விலையுயர்ந்த DLX Pro Chrome ஐ விட, புதிய லெகச் எடிஷன் மோட்டார்சைக்கிளின் விலை ரூ.1,500 அதிகமாகும். அதோடு, CB350RS புதிய Hue எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 2 லட்சத்து 19 ஆயிரத்து 357 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்ஜின் விவரங்கள்:

ஹைனெஸ் CB350 லெகச் எடிஷனில் 348.36சிசி ஏர் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது, கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின்  20.78 ஹெச்.பி. பவர் மற்றும் 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 181 கிலோ எடையுள்ள Hness CB350 ஆனது 15 லிட்டர் எரிபொருள் டேங்க் கொள்ளளவு கொண்டது. வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இரண்டு மாடல்களையும் பிக்விங் டிலர்ஷிப்களில் முன்பதிவு செய்யலாம். விரைவில் விநியோகம் தொடங்க உள்ளது. 3 ஆண்டுகள் நிலையானது மற்றும் 7 ஆண்டுகள் விருப்பமானது என இரண்டு வேரியண்ட்களுக்கும் 10 ஆண்டுகள் வாரண்டி வழங்கப்படுகிறது. 

மேலும் படிக்க: Kawasaki Ninja 7: ஹைப்ரிட் நின்ஜா 7 மின்சார மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்த கவாசகி - இப்படி ஒரு வசதியா?

வாகனத்தின் சிறப்பம்சங்கள்:

வாகனத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் டூயல் ஸ்பிரிங்ஸ் மூலம் இடைநிறுத்தப்பட்ட 19-18-இன்ச் அலாய் வீல் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் முன்புறத்தில் 310 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ ரோட்டரால் கையாளப்படுகிறது.  ஹைனெஸ்  CB350 ஆனது Pearl Siren Blue வண்ணத்தில் கிடைக்கிறது. எரிபொருள் டேங்கில் தடிமனான கிராபிக்ஸ் மற்றும் 1970-களின் இருந்தபடி புதிய CB350 இன் பக்க பேனல்களில் 'லெகசி எடிஷன்' பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, மோட்டார் சைக்கிள் தோற்றம் பெரிய மாற்றம் எதையும் கொண்டிருக்கவில்லை. ரெட்ரோ அதிர்வை வெளிப்படுத்த, தேர்ந்தெடுக்கப்பட்ட கூறுகளில் குரோம் அலங்காரத்துடன் வட்டவடிவ வடிவமைப்பு தீம் உள்ளது.  ப்ளூடூத் இணைப்புடன் கூடிய செமி-டிஜிட்டல் கன்சோல், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் விருப்பமான இழுவைக் கட்டுப்பாட்டு அமைப்பு போன்ற சமகால அம்சங்களை ஹோண்டா கொண்டுள்ளது. 

யாருக்கு போட்டி:

ஹோண்டா ஹைனெஸ் CB350 மாடல் மோட்டார்சைக்கிள் ஆனது, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 , ஜாவா ஸ்டாண்டர்ட் , பெனெல்லி இம்பீரியல் 400 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் ஆகிய மாடல்களுக்கு  போட்டியாக உள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola