Kawasaki Ninja 7: கவாசகி நிறுவனம் பல்வேறு புத்தம் புது அம்சங்களுடன் ஹைப்ரிட்  நின்ஜா 7 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. 


ஹைப்ரிட் நின்ஜா 7 மோட்டார்சைக்கிள்:


காற்று மாசுபாட்டை தவிர்க்கும் நோக்கில் தங்களது அடுத்த தலைமுறை வாகனங்களை கவாசகி நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹைப்ரிட் நின்ஜா 7 மோட்டர் சைக்கிள், பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் மின்சார மோட்டாரனது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.  அதன்படி, இந்த வாகனம் 451cc  பாரல்லல் டிவின் இன்ஜின் உடன் 48 வோல்ட் பேட்டர் பேக்குடன் கூடிய 9kW மின்சார மோட்டாரும் இடம்பெற்றுள்ளது. இவற்றின் மூலம், நின்ஜா7 வாகனமானது சுமார் 58bhp ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இதனை e-Boost முறையில் 69bhp ஆக அதிகரிக்க முடியும்.  நின்ஜா 7 ஹைப்ரிட்டின் 'உடனடி ஆக்சிலரேஷன் 1,000cc-வகுப்பு சூப்பர்ஸ்போர்ட் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. 


பைக்கின் அம்சங்கள்:


ஜப்பானிய பிராண்ரான நின்ஜா 7 ஒட்டுமொத்த விகிதத்தில் 650cc-700cc பிரிவில் வருகிறது ஆனால் 250cc பைக்கின் எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது. தற்போது, ​​பைக்கின் முழு விவரங்களையும் பிராண்ட் வெளியிடவில்லை. அதேநேரம்,  இந்த பைக்கில் EV, Eco Hybrid மற்றும் Sport Hybrid ஆகிய மூன்று ரட் மோட்கள் உள்ளன.  புதிய Kawasaki Ninja 7 இன் விலை இன்னும் வெளியிடப்படவில்லை. டெலஸ்கோபிக் ஃபோர்க்/மோனோஷாக் அமைப்பில் வழங்கப்பட்டுள்ளது. நின்ஜா 400 மற்றும் 650 மாடல்களை போன்றே இரட்டை முன் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான முன்பதிவு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும். ஐரோப்பிய சந்தைக்கான விநியோகங்கள் ஏப்ரல் 2024 முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்திய வெளியீடு தொடர்பான தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.


புத்தும் புது அம்சங்கள் என்ன?


இந்த மாடலில் வழக்கமான கிளட்ச் கியர் ஷிஃப்டருக்கு மாற்றாக ஷிஃப்ட் பேடில்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய நின்ஜா 7 ஹைப்ரிட் மாடலை ஓட்டும் போது, வாகனம் எந்த கியரில் இருந்தாலும், ஒரு பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் தானாக அதனை முதலாவது கியருக்கு மாற்றிக் கொள்ளலாம். இதில் உள்ள ஆட்டோமேடிக் லான்ச் பொசிஷன் ஃபைண்டர் இதற்கான வசதியை வழங்குகிறது. வாகனத்தின் இயக்கத்தை முழுமையாக நிறுத்தினால், இன்ஜின் தானாக ஆஃப் ஆகிவிடும். பிறகு, திராடில் க்ரிப்-ஐ மீண்டும் முறுக்கினால், இன்ஜின் செயல்பாட்டை தொடங்கும். நின்ஜா மற்றும் Z e-1 மாடலில் உள்ளதை போன்றே இதிலும் ப்ளூடூத் வசதி கொண்ட TFT ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் நோட்டிஃபிகேஷன் மற்றும் நேவிகேஷன் அம்சங்களை இயக்கலாம். ஹைப்ரிட் நின்ஜா 7 மாடல் உடன்  நின்ஜா e-1 மற்றும் Z e-1 மாடல்களையும், கவாசகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


 


Car loan Information:

Calculate Car Loan EMI