நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் மக்களவையில் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதில், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதிவிகதமாக கணக்கிப்பட்டுள்ளது. நாம் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவலில் நடுவில் இருக்கிறோம். இந்த நிதிநிலை அறிக்கை அடுத்த 25 ஆண்டுகளுக்கான இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பாதையை நோக்கி உள்ளது. சுயசார்பு திட்டத்தின்கீழ் தொழில் துறையை ஊக்குவிக்கும் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒருகிணைந்த வளர்ச்சியின் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்கப்படும். வரும் நிதியாண்டியில் 22ஆயிரம் கிலோமீட்டர் தொலைவிற்கு சாலை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். கடந்த 2021-22 பட்ஜெட்டில் அரசின் செலவீனங்கள் அதிகமாக இருந்தது. இந்த பட்ஜெட்டில் இளைஞர்கள், மகளிர், விவசாயிகள் உள்ளிட்டவர்களுக்கு பயன் உள்ளதாக அமையும். அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புதிதாக விடப்படும். மேலும் 100 பிஎம் கத்தி சக்தி டெர்மினல்கள் உருவாக்கப்படும். மேலும் 60 லட்சம் புதிய வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்" எனக் கூறினார்.
மேலும் படிக்க:வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? பட்ஜெட்டில் உங்களுக்கு சொன்னது இதுதான்!
மேலும் அவர் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி இனிமேல் டிஜிட்டல் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகளுக்கு 30 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி அமல் படுத்தப் பட்டதில் இருந்து இந்த ஜனவரி மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி தான் மிக அதிகமான தொகை வசூலிக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் நடப்பு ஜனவரி மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!