நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று மக்களவையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 


இந்நிலையில் மக்களவையில் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். அதில்,  மொபைல் சார்ஜர், கேமரா லென்ஸ் உள்ளிட்ட உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரிச்சலுகை விதிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 





மேலும் படிக்க:வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? பட்ஜெட்டில் உங்களுக்கு சொன்னது இதுதான்!


அதேபோல், சாமானியர்கள் அத்தியாவசத்திற்கு பயன்படுத்தும் குடைகளுக்கான இறக்குமதி 20 % வரியாக உயர்த்தப்படும், ஆடம்பர பொருட்களாக பயன்படுத்தும் பட்டை தீட்டப்பட்ட வைர நகைகளுக்கான சுங்கவரி 5 % வரியாக குறைக்கப்பட்டுள்ளது அன்றாட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட வைரங்கள் மற்றும் ரத்தினக் கற்கள் மீதான சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் நேரத்தில் குடைகள் விலை உயர்ந்து வருவதாக பலரும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 






 


 






Also Read | Union Budget 2022 Highlights in Tamil: பட்ஜெட் தொடங்கியது முதல் முடிவு வரை... முக்கிய அறிவிப்புகளின் தொகுப்பு இதோ...!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண