இந்தியாவின் 2022-23ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார், அவற்றில் ரயில்வே துறைக்காகவும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.


ரயில்வே துறையின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள், “நாடு முழுவதும் 2023ம் ஆண்டுக்குள் 2 ஆயிரம் கி.மீ. தொலைவிற்கு ரயில்வே கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில்நிலையம், ஒரு உற்பத்தி பொருள் என்ற நடைமுறை அமல்படுத்தப்படும். போக்குவரத்து வசதிகளுக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.




நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும். வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இந்த ரயில்கள் கொண்டு வரப்படுகின்றன. சிறந்த ஆற்றல் திறன்கொண்ட புதிய தலைமுறை வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும். அடுத்த 3 ஆண்டுகளில் 100 பிரதம கதி சக்தி ரயில் முனையங்கள் அமைக்கப்படும். சிறு விவசாயிகள் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ரயில்வே புதிய தயாரிப்புகளை உருவாக்கும்.


பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் என்ற திட்டத்தின் மூலம் 2021-22 நிதிநிலை அறிக்கையில் பொது முதலீடு மற்றும் மூலதனச் செலவு கணிசமான அளவு உயர்ந்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையில் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், எஸ்.சி.எஸ்.டி. பிரதமர் கதி சக்தி மாஸ்டர் பிளான் மூலம் வழிநடத்தப்படுவார்கள் “ என்று அவர் அறிவித்தார்.




நிர்மலா சீதாராமனின் அறிவிப்பில் குறிப்பிட்டு எந்த ரயில்சேவைகள் பற்றியும் அறிவிப்புகள் இல்லை. புதியதாக அமைய உள்ள 100 ரயில் முனையங்கள், வந்தே பாரத் ரயில்கள் குறித்து ரயில்வே துறை விரிவாக விளக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆத்மநிர்பர் பாரதத்தை அடைவதற்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது என்றார். ரயில்களின் பயணிகள் கட்டணம் குறைப்பு, சலுகை உள்ளிட்டவை குறித்து எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை.


நாட்டில் ரயில்வே துறைக்கு என்று தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு நாட்டின் நிதிநிலை அறிக்கையுடன் இணைந்தே ரயில்வே பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Budget 2022: ‛தபால் வங்கி கணக்கு இருந்தால்... வங்கி பண பரிமாற்றம் செய்யலாம்...’ -பட்ஜெட்டில் அறிவிப்பு!


மேலும் படிக்க : Budget 2022 Memes: வரிச்சலுகை ஏமாற்றம்... வரிவரியாய் வரிசை கட்டும் மீம்ஸ்கள்!


மேலும் படிக்க : Union Budget 2022: சாமானியர் பயன்படுத்தும் குடைக்கு வரி உயர்வு... பணம் படைத்தவர் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண