மத்திய அரசின் 2022-23ம் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, அவர் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் பொதுப்பங்குகள் விரைவில் வெளியிடப்படும் என்றார். நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தங்களின் குடும்ப வாழ்வாதாரத்திற்காக எல்.ஐ.சி.யில் முதலீடு செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே எல்.ஐ.சி. தனியார்மயமாக்கப்படும் என்று தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், எல்.ஐ.சி.யின் பங்குகள் விரைவில் வெளியிடப்படும் என்ற அறிவிப்பால், எல்.ஐ.சி.யும் விற்பனைக்கு வருகிறதா? என்று அதில் முதலீடு செய்துள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாய முறைகள் ஊக்குவிக்கப்படும். எண்ணெய் வித்துக்கள், சிறு தானியங்கள் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இணையதளங்கள் மூலமாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.
உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீள்வதற்காக தேசிய மனநல சிகிச்சை திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். மின்சார வாகனங்களில் பேட்டரிகளை சார்ஜ் செய்வதற்கு பதிலாக பிரத்யே மையங்களில் மாற்றிக்கொள்ளும் வசதியுடன் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.
பொதுப்போக்குவரத்தில் சுற்றுப்புற சூழலுக்கு மாசு இல்லாத தூய்மையான போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 2030ம் ஆண்டுக்குள் 280 கிலோவாட் மின்சாரம் சூரிய ஒளி மூலம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வளர்ச்சிக்காக மூன்று புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சகி இயக்கம், வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 ஆகிய இயக்கங்கள் மகளிருக்காக தொடங்கப்படும்.
தேசிய ஓய்வு திட்டத்திற்கு மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் அளவு 10 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும். உள்நாட்டில் மின்னணு பொருள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் ஆகிய அறிவிப்புகளையும் நிதியமைச்சர் வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்க : Budget 2022: ‛தபால் வங்கி கணக்கு இருந்தால்... வங்கி பண பரிமாற்றம் செய்யலாம்...’ -பட்ஜெட்டில் அறிவிப்பு!
மேலும் படிக்க : Budget 2022 Memes: வரிச்சலுகை ஏமாற்றம்... வரிவரியாய் வரிசை கட்டும் மீம்ஸ்கள்!
மேலும் படிக்க : Union Budget 2022: சாமானியர் பயன்படுத்தும் குடைக்கு வரி உயர்வு... பணம் படைத்தவர் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்