2022 - 2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நான்காவது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட் இதுவாகும். மேலும், இரண்டாவது ஆண்டாக காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டும் இது.
ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு, மலை வாழ் மக்களுக்கு போக்குவரத்தை எளிதாக்கும் பர்வத்மாலா திட்டம், 5ஜி தொழில்நுட்ப வசதி, அனைத்து கிராமங்களிலும் ஃபைபர் ஆப்டிக்கல், அனைத்து கிராமங்களிக்லும் ஃபைபர் மூலம் இணைய வசதி என பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்ப்பும், வரவேற்பும் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெங்கட்ராமன் பட்ஜெட் கூறுகையில், “இது ஒரு தொலை நோக்கு பட்ஜெட். 25 ஆண்டுகளுக்கு உண்டான ப்ளூ ப்ரிண்ட் இது.
கல்வியைப் பொறுத்தவரை கிராம மக்களுக்காக 200 சேனல்கள் உருவாக்கப்படுவது வரவேற்கக்கூடிய ஒன்று. நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அழுத்தமான திட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த பட்ஜெட் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது. இது மூலம் பல தொழில் முனைவோர்கள் உருவாகுவார்கள்” என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Etharkkum Thunindhavan Release: உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்... வெளியானது எதற்கும் துணிந்தவன் ரிலீஸ் தேதி!
UNION BUDGET 2022-23 : பட்ஜெட் பிரீஃப்கேஸின் பயணம்... இதோ! உங்கள் பார்வைக்கு..