UNION BUDGET 2022-23 : பட்ஜெட் பிரீஃப்கேஸின் பயணம்... இதோ! உங்கள் பார்வைக்கு..
இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர் கே சண்முகம் செட்டி நவம்பர் 26, 1947 அன்று முதல் பட்ஜெட் பிரீஃப்கேஸை எடுத்துச் சென்றார்.
கடந்த 2019 ம் ஆண்டு நடந்த பட்ஜெட் தாக்குதலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாரம்பரிய பேப்பர் முறையை புறம்தள்ளி, டிஜிட்டல் முறை பட்ஜெட் தாக்குதலை தேர்ந்தெடுத்தார்.
ஆண்டுதோறும் பட்ஜெட் தினத்தன்று, நிதியமைச்சர் சிவப்பு பெட்டியுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே புகைப்படம் எடுத்து கொள்வார்கள். இந்த பாரம்பரியத்தை இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய நிதி அமைச்சர்களும் கடைபிடித்து வருகின்றனர்.
நிர்மலா சீதாராமன் 2021 இல் ஒரு முழுமையான காகிதமில்லாத பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதில் ஐபேடை எடுத்துச் செல்வதை நம்மால் காண முடிந்தது.
கிளாட்ஸ்டோனின் அசல் பட்ஜெட் பெட்டி 2010 இல் ஓய்வு பெற்று, தற்போது சர்ச்சில் போர் அறைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வரவு செலவுத் தாள்களை பிரீஃப்கேஸில் எடுத்துச் செல்லும் பாரம்பரியம் ஆங்கிலேயர்களால் நமக்கு வழங்கப்பட்டது. 1860 ஆம் ஆண்டில், அப்போதைய பிரிட்டிஷ் பட்ஜெட் தலைவரான வில்லியம் ஈ. கிளாட்ஸ்டோன், குயின்ஸ் மோனோகிராம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற சூட்கேஸைப் பயன்படுத்தினார். இது 'கிளாட்ஸ்டோன் பாக்ஸ்' என்று அழைக்கப்பட்டது. இவருக்கு பிறகு அனைத்து தலைவர்களும் தங்கள் பட்ஜெட்டின் போது இந்த பெட்டியை எடுத்துச் சென்றனர்.