டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் நாட்டின் 2022-23ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வேளாண் நிலங்களை அளவிடுவதற்காக ட்ரோன் பயன்படுத்த வரும் நிதியாண்டு முதல் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், வேளாண் நிலங்களை அளவிடுவதற்காக ட்ரோன்களை பயன்படுத்த அனுமதிக்கப்படும். மேலும், ட்ரோன்களை பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தெளிக்கும் பணிகளும் மேற்கொள்ளும் பணிகளும் ஊக்கவிக்கப்படும் என்றார்.
இதுமட்டுமின்றி விவசாயம் மற்றும் கிராமப்புற நிறுவனங்களுக்கான தொடக்கநிலை நிதிகள் நபார்டு மூலமாக அளிக்கும் வசதிகள் எளிதாக்கப்படும். இது பண்ணை விளைபொருட்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற ஏதுவாக இருக்கும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதுமட்டுமின்றி, ஸ்டார்ட் அப்கள் கொண்ட விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்படும் என்றார். நாட்டின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அடுத்தாண்டு மார்ச் வரை வரிச்சலுகை உண்டு என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்குவோம். 2021-22 ராபி பருவத்தில் கொள்முதலில் 163 லட்சம் விவசாயிகளிடமிருந்து 1208 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரசாயனமற்ற இயற்கை விவசாயம் நாடு முமுழுவதும் ஊக்குவிக்கப்படும். 2022ம் ஆண்டு திணை ஆண்டாக இருக்கும் என்பதால் அறுவடைக்கு பிந்தைய திணை உற்பத்திக்கான மதிப்பு கூட்டலுக்கு ஆதரவளிக்க சிறப்புத்திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
9 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி அளிக்கும் நோக்கத்தில் கென்ட்வா இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். 5 நதி இணைப்புகளுக்கான வரைவு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அவை செயல்படுத்தப்படுவதற்கு மத்திய அரசு ஆதரவை வழங்கும் என்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Budget 2022: ‛தபால் வங்கி கணக்கு இருந்தால்... வங்கி பண பரிமாற்றம் செய்யலாம்...’ -பட்ஜெட்டில் அறிவிப்பு!
மேலும் படிக்க : Budget 2022 Memes: வரிச்சலுகை ஏமாற்றம்... வரிவரியாய் வரிசை கட்டும் மீம்ஸ்கள்!
மேலும் படிக்க : Union Budget 2022: சாமானியர் பயன்படுத்தும் குடைக்கு வரி உயர்வு... பணம் படைத்தவர் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்