TN Agriculture Budget 2024 LIVE: இலவச மரக்கன்றுகள் முதல் பாசன மின் இணைப்பு வரை! தமிழக வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் இதோ!
TN Agriculture Budget 2024 LIVE: தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள, ABP இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9 கோடி செலவில் மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைக்க ரூ.60 கோடியில் விளைபொருட்களை பண்ணை வழி வர்த்தகம் செய்ய வழிவகை செய்யப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
2024-25ஆம் ஆண்டில் மேலும் 10 பொருட்களுக்கு புவிசா குறியீடு பெறப்படும். சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பாவுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களில் சி,டி பிரிவு வாய்க்கால்களை தூர்வாருவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஈரோடு, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்டங்களில் 5 மஞ்சள் மெருகூட்டும், வேகவைக்கும் இயந்திரங்கள் வாங்க ரூ.2.12 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
10 நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கிட ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
விவசாயிகள் நிரந்தரப் பந்தல் அமைத்து பாகல், புடல், பீர்க்கன், சுரைக்காய் பயிரிட ரு.9.40 கோடி மானியம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தென்காசி நடுவக்குறிச்சியில் புதிய அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
26,179 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தானியங்கி மின்னனு நீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 12,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் சூரிய தோட்டம், செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச் செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வரும் நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, மீன் வளர்ப்போருக்கு கடன் வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
2023-24 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சர்க்கரை ஆலைகளின் செயல் திறனை மேம்படுத்த ரூ.12.51 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ஆதி திராவிட, பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறு,குறு விவசாயிகளுக்கு 20 சதவீத கூடுதல் மானியம் வழங்கப்படும். ஆதி திராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் வருவாய் இழப்பில் இருந்து மீண்டு வர பயிர்க் காப்பீடு திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
மூலிகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
உதகை ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்களை அறிமுகம் செய்து பொதுமக்களை கவரும் வகையில் பூங்கா மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
10 அரசு தோட்டக்கலை பண்ணைகளில் தோட்டக்கலை விற்பனை மையங்கள் ரூ.1 கோடியில் அமைக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் உணவு மானியத்துக்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்குவதற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ரூ.5 கோடியில் 100 உழவர் அங்காடிகள் அமைக்கப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
10 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் மறுமலர்ச்சி ஏற்படுத்திட ஒரு கிராமம், ஒரு பயிர் என்ற திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வேளாண் பரப்பை அதிகரித்து, உற்பத்தியை பெருக்க ரூ.108 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த திறன் கொண்ட சீவன் சம்பா விதைகள் விநியோகிக்கப்படும். 200 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் ரக விதைகள் உற்பத்தி செய்யப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தலா 37 ஆயிரம் ஏக்கர் களர், அமில நிலங்களைச் சீர்ப்படுத்த ரூ.22.5 கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பயிர் உற்பத்தித்திறன் உயர்த்துதல் ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ரசாயண உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண் வளம் காக்க ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்க ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2,482 கிராம ஊராட்சிகளில் 2 லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு ரூ.6.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள், உரப்படுக்கை அமைக்க ரூ.5 கோடி மானியம் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தென் மாவட்டங்களில் 2023ல் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கை பேரிடர்களால் பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டது. இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் மன்னுயிர் காப்போம் திட்டத்திற்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2 லட்சம் விவசாயிகள் பயனடைய, 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் தயாரிக்க ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 1.5 லட்சம் பாசன மின் இணைப்புகள் வழங்கப்பட்டது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நுண்ணீர்ப் பாசனம், வேளாண் இயந்திரங்களுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படும என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2022-23ஆம் ஆண்டில் 116 மெட்ரிக் டன்னாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
வேளாண் நிதிநிலை அறிக்கை உழவர் வாழ்க்கையை மேலும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும். உழவர் பெருமக்களின் நலனுக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியத்துவம் அளித்து வருகிறார் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
தமிழ் சமூகம் உழவர்களை உச்சத்தில் வைத்துள்ளது. உழவர்கள் வாழ்வு வளம்பெற வேண்டும் என்ற நோக்கில் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.
சட்டப்பேரவையில் வேளான் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
TN Agriculture Budget 2024 LIVE : நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை, அமைச்சர் தங்கம் தென்னரசால் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
Background
TN Agriculture Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெடை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்:
தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில் 7 அம்சங்களில் பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில் இன்று, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். திமுக தலைமையில் 2021ம் ஆண்டு ஆட்சி அமைந்ததுமே முதலே, தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2023-24 ஆம் நிதி ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் சற்றே உயர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் தாக்கல் இருக்குமா?
வேளாண் பட்ஜெட்டில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் மட்டுமின்றி, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொது பட்ஜெட்டில் பல்வேறு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை போன்று, இன்றைய வேளாண் பட்ஜெட்டில் தங்களுக்கான நலத்திட்டங்கள் இடம்பெறும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலும் நெருங்குவதால், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த விவசாயிகளை கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?
மூத்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவது, மண்வள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பது, வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, காப்பீட்டு தொகையை விடுவிப்பது, கிராமங்கள் தோறும் உலர் களங்கள் அமைப்பது, நேரடி கொள்முதலை அதிகரிப்பது, அரசும் தனியாரும் இணைந்து ஒவ்வோர் ஊராட்சியிலும் உழவர் உதவி மையம், விவசாய மேலாண்மை மையங்களை செயல்படுத்துவது மற்றும் அரசு உதவிகள் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -