HBD MK Stalin: குடியரசுத் தலைவர் முதல் தவெக தலைவர் வரை... முதல்வருக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்...

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவில் தொடங்கி, தவெக தலைவர் விஜய் வரை, ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Continues below advertisement

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் திமுக தொண்டர்களால் உற்சாகமா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தொடங்கி, நாட்டின் முக்கியமான தலைவர்கள் ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளனர்.

Continues below advertisement

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கடிதம் மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதேபோல், குடியரசு துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கரும், மு.க. ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மு.க. ஸ்டாலின் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் என தெரிவித்துள்ளார். இதேபோல், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில், எனது சகோதரரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். அரசியலமைப்புச் சட்டம், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதில் இணைந்து பயணிப்போம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இதேபோல், நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழில் கையெழுத்திட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மு.க. ஸ்டாலின் நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகளை தொட இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதேபோல், தனது எக்ஸ் பக்கத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.

Continues below advertisement
Sponsored Links by Taboola