நாட்டின் 2022-23ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, அவர் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் ரூபாய் 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி வருவாய் கிடைத்துள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகம் என்றும் நிதியமைச்சர் குறிப்பிட்டார். மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. வருவாய் பங்கீடை மத்திய அரசு முறையாக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த ஆட்சி முதல் வைக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், மத்திய அரசு ஜனவரி மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வரி வருவாய் மட்டும் ரூபாய் 1.40 லட்சம் கோடி என்று அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




மேலும், நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் 2022-23ம் நிதியாண்டிற்கான மத்திய அரசின் மூலதனச் செலவுகள் 10.68 லட்சம் கோடியாக அதிகரிக்கும். இது நாட்டின் மொத்த உள்நாட்ட உற்பத்தியில் 4.1 சதவீதமாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பொது முதலீடு மற்றும் மூலதன செலவினங்களுக்கான ஒதுக்கீட்டில் கூர்மையான அதிகரிப்பை வழங்கியுள்ளது.  தற்போது தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது அனைத்து பெரிய பொருளாதாரங்களிலும் மிக அதிகமானது. கொரோனா காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.




போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்ப வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நடப்பு நிதியாண்டில் 25 ஆயிரம் கிலோ மீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும். மலைப்பகுதிகளில் போக்குவரத்து மற்றும் செய்தித்தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம். உள்ளூர் வணிக நிறுவனங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் திட்டம் கொண்டு வரப்படும். ரூபாய் 44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும். நீர்ப்பாசன இணைப்புத் திட்டம் ரூபாய் 46 ஆயிரத்து 605 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.


மேலும் படிக்க : Budget 2022: ‛தபால் வங்கி கணக்கு இருந்தால்... வங்கி பண பரிமாற்றம் செய்யலாம்...’ -பட்ஜெட்டில் அறிவிப்பு!


மேலும் படிக்க : Budget 2022 Memes: வரிச்சலுகை ஏமாற்றம்... வரிவரியாய் வரிசை கட்டும் மீம்ஸ்கள்!


மேலும் படிக்க : Union Budget 2022: சாமானியர் பயன்படுத்தும் குடைக்கு வரி உயர்வு... பணம் படைத்தவர் வாங்கும் வைரத்திற்கு வரி குறைப்பு!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண