மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் வளாகத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பிரம்மோற்சவ பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி திருவிழாவை காண பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி கட்டி வருவது சிறப்பாக இருக்கும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோவிலில், ஆடிப்பெருந்திருவிழா  கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அடிப்பெருந் திருவிழாவில் திருக்கோவில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் "கோவிந்தா, நமோ நாராயணா" என்ற பக்தி கோஷத்துடன்  நடைபெற்று வருகிறது. இதையொட்டி கிட்டதட்ட 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஸ்வாமி தினசரி காலை பல்லக்கிலும், இரவு வாகங்களிலும் அருள் பாலிக்கின்றார். அன்ன வாகனம், சிம்ம வாகனம், தங்க வாகனம், அனுமன் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் கள்ளழகர்  எழுந்தருளினார்.


இந்த விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் நாள் திருவிழாவான நேற்று திருத்தேரோட்ட பிரமோற்சவம் நடைபெற இருந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஆகமவிதிப்படி கோவில் உட்பிரகாரத்திலயே விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று 10-ஆம் நாள் திருவிழாவாக 25ம் தேதி தீர்த்தவாரியும், நாளை 11ம் நாள் திருவிழாவாக 26ம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது.



 

அழகர்கோவில் ஆடித்திருவிழா வீடியோ வழியாக காண இங்கே கிளிக் செய்யவும் -Madurai alagar kovil : மோகினி அவதாரத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்..

 

ஆடி திருவிழாவின் 9 ஆம் நாள் விழாவான  நேற்று ஆலயத்தில் திருத்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு ஆலயத்தில் பரிகார பூஜைகள் காலையில் நடத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று இரவு  ஆடி பவுர்ணமியையொட்டி ஆலயத்தின் முன்பாக அருள்மிகு பதினெட்டான்படி கருப்பணசாமி சன்னதியில்  படி பூஜை மற்றும் சந்தனகாப்பு நடத்தப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த பதினெட்டு படிகளுக்கும் படிபூஜை நடத்தப்பட்டு கதவுகள் திறக்கப்படுகின்றது. அதேபோல் ஆடி அமாவசை அன்றும் சந்தனகாப்பு நடைபெறும்.



 

அழகர்கோவில் கொடியேற்றம் நிகழ்ச்சி ஆல்பம் காண இங்கே கிளிக் செய்யவும் - மதுரை : அழகர்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பெருந்திருவிழா

கொரோனா தொற்று காரணமாக ஆலயத்தில் பக்தர்கள் இன்றி விழா நடைபெற்றது. இதில் தென்மண்டல ஐ.ஜி அன்பு மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாச்சலம் கோயில் உதவி ஆணையர் அனிதா ஏற்பாடு செய்திருந்தனர்.


 



மேலும்  செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - இசையில் புதுமை முக்கியம்” பூக்களுடன் ஒப்பிட்டு இளையராஜா நெகிழ்ச்சி!