மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த  சித்தர்காடு  கிராமத்தில் அமைந்துள்ளது பழைமையான, மிகவும் பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீ பால் முத்து மாரியம்மன் ஆலயம்.  இவ்வாலயத்தில் ஸ்ரீ பால் முத்து மாரியம்மன் இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் கடவுளாக அருள்பாலித்து வருகின்றனர்.


Actor Vijay meet Prasanth Kishore: அரசியல் ஆட்டத்திற்கு தயாரான நடிகர் விஜய்...! பிரசாந்த் கிஷோருடன் ரகசிய சந்திப்பு?




இந்நிலையில் மிகவும் சிதிலமடைந்து  காணப்பட்ட இக்கோயிலை  ஆகம விதிப்படி கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை நடத்த நகராட்சி 29 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரஜினி என்பவரது முயற்சியால், கிராம மக்கள் பங்களிப்புடன், கோயில் குடமுழுக்கு பணிகளை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து கோயில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தை அடுத்து கும்பாபிஷேக விழாவிற்கான நாள் குறிக்கப்பட்டு, கடந்த நேற்று கணபதி ஹோமத்துடன், முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று இரண்டாம் காம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. 




Ramadoss Wish MK Stalin : "எனது நண்பர் கலைஞர் எடுத்த முயற்சிதான் இது" - ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்


தொடர்ந்து மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க, புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து விமான கலசத்தை அடைந்தது. பின்னர் வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் ஓத  கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ள, சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். 


Suriya on Political Entry: என்ன பார்த்தா எப்படி தெரியுது? - அரசியல் குறித்த கேள்விக்கு பளிச் பதில் தந்த சூர்யா..




தொடர்ந்து, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில் காண மயிலாடுதுறை மாவட்ட மக்கள் இன்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.    கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கொரோனா வைரஸ் தொற்று வழிகாட்டுதலை பின்பற்றி சித்தர்காடு கிராம மக்கள் செய்திருந்தனர்.  கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மயிலாடுதுறை  காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.



கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இன்று முதல் 48 தினங்களுக்கு மண்டல பூஜை இவ்வாலயத்தில் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டால் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்