தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜயை, ஐபேக் நிறுவனர், பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். இந்த தீடீர் சந்திப்பு விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்வரும் 2024- ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள, புதிய கட்சி தொடங்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜயை வலியுறுத்தி வரும் நிலையில், இருவரின் சந்திப்பு பேசுப்பொருளாக மாறியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதரபாத்தில் நடிகர் விஜயை பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசியுள்ளார். விஜயின் நெருங்கிய வட்டாரம் இது குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ‘தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து விட்டது. அதன் கட்டமைப்பு வலுவான உள்ளது. அதே நேரம் பா.ஜ.கவை சார்ந்து அரசியல் நடத்திய அ.தி.மு.க.விற்கு சரியான தலைமை இல்லாத காரணத்தால், பெரும் சரிவை சந்தித்து வருகிறது. கருணாநிதி எதிர்ப்பில் வளர்க்கப்பட்ட அ.தி.மு.க.,வினர், தங்கள் கட் சியின் எதிர்காலம் குறித்து கவலையும் குழப்பத்துடனும் உள்ளனர். இருப்பினும், அவர்கள் தி.மு.க.வுக்கு செல்ல விரும்பவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க-வுடன் கூட் டணி வைத்ததால் தான் தோல்வியை சந்தித்ததாக கருதுகின்றனர். இந்நிலையில், விஜய் கட்சி தொடங்கினால் அவர்கள் இணைய வாய்ப்பிருக்கிறது. நடந்த உள்ளாட்சி தேர்தல், விஜய் மக்கள் இயக்கம் குறைந்தப்பட்சம் 10% வாக்குகளை பெற்றது. இதன் அடிப்படையில் விஜய் அரசியலுக்கு வந்தால் நல்ல ஆதரவு கிடைக்கும். அதன் பிறகு, 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில், விஜய் கட்சி தலைமையில் மெகா கூட்டணி அமையும். இதைத்தான் விஜய்- பிராசந்த் கிஷோர் சந்திப்பு விளக்குகிறது.
வெளிநாட்டு கார் இறக்குமதி தொடர்பாக, விஜய் தொடர்ந்த வழக்கில், அவரது மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, தமிழக அரசு தரப்பில் வாதிடப் பட்டது. சமூக வலை தளங்களில் நடிகர் விஜய்யை சிறுமைப்படுத்தி, தி.மு.க. இளைஞணி “செயலர் உதயநிதி ஆதரவாளர்கள் கருத்து வெளியிடுகின்றனர். தீவிர அரசியலுக்கு விஜய் வந்துவிடுவார் என உதயநிதி தரப்பினர் கருதுகின்றனர். இதனால், விஜய்க்கு நெருக்கடி கொடுக்கவும் முயல்கின்றனர். விஜய் கட்சி குறித்த அச்சம், ஆளுங்கட்சியினரிடம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
விஜய் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து சினிமா வட்டாரங்கள் கூறியபோது, ’நடிகர் விஜய்க்கு அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வெகுகாலமாக இருந்து வகுகிறது. இதற்கு அவரது தந்தையும் ஒரு வகையில் காரணம். இதனால் தன் சினிமா வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தந்தையின் அரசியல் கள செயல்பாடுகளுக்கும், முயற்சிகளுக்கும் விஜய் தடை விதித்தார். இருந்தாலும், ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில், ரசிகர் மன்றம் சார்பில் போட்டியிட வைத்தார். ஒரு சில இடங்களில் வெற்றியும் கிடைத்தது. இதையடுத்தே, அவர் தீவிர அரசியலில் இறங்க விரும்புகிறார். ஆனால், நடி கர் விஜய்யும், நடிகர் ரஜினி போல தான். வெற்றி கிடைக்கும் என 100 சதவீதம் ஊர்ஜிதமாக தெரிந்தால் மட்டுமே எதையுமே செய்வார். அப்படிதான் பிரசாந்த் கிஷோர் மற்றும் விஜய் சந்திப்பு.
இந்தச் சந்திப்பு குறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. இது. தி.மு.க.,வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், பிரசாந்த் கிஷோர் மூலமாக, நடிகர் விஜய்யை அரசியலில் களம் இறக்கி, பா.ஜ.க.-வுக்கு கிடைக்க இருக்கும் வாக்குகளைப் பிரிக்க, அவர்கள் திட்டமிடுகிறார்கள். பா.ஜக.வின், வளர்ச்சியை தடுத்து விடலாம் என தி.மு.க., நினைப்பது அறியாமையின் வெளிபாடு. தி.மு.க.,வின், 'பி டீம்' ஆக அரசியலில் களம் இறங்க போகிறாரா விஜய்? என்று வினவியுள்ளனர்.