பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஏபிபி நாடு-க்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது,
“ அருந்ததியினருக்கு நான்தான் இட ஒதுக்கீடு வாங்கிக்கொடுத்தேன். இஸ்லாமியர்களுக்கு நான்தான் இட ஒதுக்கீடு வாங்கிக்கொடுத்தேன். 20 சதவீத இட ஒதுக்கீடு போராடி 108 சமூகத்தினருக்கு வாங்கிக் கொடுத்தேன். அவர்கள் எங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றம் சென்றுள்ளனர். “ என்றார்.
அப்போது, அவரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்று இந்தியாவில் உள்ள தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். உங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். நீங்கள் இணைவீர்களா? என ஏபிபி நாடு செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராமதாஸ், “அவருடைய முயற்சி நல்ல முயற்சி. சமூகநீதியில் அவருடைய தந்தை, என்னுடைய நண்பர் கலைஞர் அக்கறை கொண்டிருந்தார். இவரும் முயற்சி எடுக்கிறார். இவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.”
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதல் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பிடித்து வருகிறது. சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. தொடர்ந்தது. கடந்த மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிட்டது.
சமூகநீதிக்கான கூட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நாட்டில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்