கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், சுமார் 130க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளிக்கு நெடுமானுர், காட்டுக்கொட்டாய், கூட்டுரோடு,மணக்காடு, மூரார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கரடுமுரடான பாதைகளையும்,காட்டு வழிகளிலும் கடந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.




இதை பார்த்த தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்ட கந்தசாமி, பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சக ஆசிரியர்களிடம் இது பற்றி பேசியுள்ளார். பின்பு ஒன்று சேர்ந்த ஆசிரியர்கள் மாணவர்களின் வருகைப் பதிவு குறையாமல் இருப்பதற்காகவும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் தங்களது சொந்த செலவில் காலையிலும், மாலையிலும் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதியாக ஆட்டோ ஒன்றை ஏற்பாடு முடிவு எடுத்துள்ளனர். அந்த வகையில்தான் மூரார்பாளையத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரிடம் நெடுமனூர், கூட்ரோடு, காட்டுக்கொட்டாய், மணக்காடு, மூரார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளை ஆட்டோவில் காலையிலும், மாலையிலும் பள்ளி வந்து செல்வதற்கு மாதம் 5,000 ரூபாய் தருகிறோம் என கூறி உள்ளனர்.






மேலும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆட்டோ வசதி ஏற்படுத்திக் கொடுத்த ஆசிரியர்களின் இந்தக் கூட்டு முயற்சிக்கு அந்த பகுதியில் உள்ள மாணவர்களின் பெற்றோர்கள், பொதும் மக்கள் என ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களும், நன்றியும் தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு உறுதுணையாக இருந்து வரும் ஆட்டோ ஓட்டுனர் வேல்முருகனையும், வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தில் எனக்கும் சிறிய பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக 5 ஆயிரம் ரூபாய் வேண்டாம். மாதம் 3 ஆயிரம் போதும் என ஒப்புக்கொண்டு, மாணவரின் பள்ளி படிப்பிற்காக தனது ஆட்டோ பணியை மகிழ்ச்சியுடன் பள்ளி மாணவர்களை அழைத்து சென்று வருகிறார் வேல்முருகன்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர