நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று செய்தியாளர் கேட்ட போது, “ என்ன பார்த்தா எப்படி தெரியுது. அப்படியெல்லாம் எனக்கு எந்த எண்ணமும் கிடையாது. என்னோட மக்கள்தான் இந்த மேடையை எனக்கு கொடுத்திருக்கிறார்கள். நான் எதற்கு குரல் கொடுத்தாலும், அதில் எனக்கு கொஞ்சமாவது

  அறிவு இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வேன். கல்விக்காக குரல் கொடுக்கிறேன். காரணம் அதைப் பற்றி பேச முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எப்போது பேச வேண்டுமோ, அப்போது பேச வேண்டும். அதனால்தான் அமைதியை நான் வன்முறை என்றேன். 


காந்தியை குறிப்பிட்ட சூர்யா


காந்தியை ட்ரெயினில் இருந்து தள்ளி விட்டார்கள். அவர் உடனே பதில் கொடுத்தார். அதன்பின்னர் அது வரலாறாக மாறியது. அதனால் தகுந்த நேரத்தில் பேச வேண்டிய தருணத்தில் எவ்வளவு சீக்கிரம் பேச வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் பேச வேண்டும். அவ்வளவுதான். இதைத் தவிர்த்து எனக்கு எந்த கொள்கையும் கிடையாது. அரசியலுக்கு வருவதற்காக நான் இதையெல்லாம் செய்ய வில்லை” என்றார்.   






 


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகிய ஜெய்பீம் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அவர்  இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் இணைந்தார். இந்தப்படம் கடந்த மார்ச் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரியங்கா மோகன்,  சத்யராஜ் , சூரி, புகழ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இந்தப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.